Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

மறுமைக்கான தயாரிப்பில் உள்ளீர்களா ?

நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) 
என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70% வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....!!!

நபி(ஸல்) கூறினார்கள்,'யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்''.என்றார்கள்.
நூல் : புகாரி 7119 
.
வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலிய யூதர்களிடம் போரிடும் என இஞ்ஜீல்(பைபிள்) சொல்லுகிறது..

'ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து(யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.(வெளிப்படுத்தின விஷேஷம்16:12
இப்படித்தான் இனி நம் கண் முன்னே மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை...காரணம் மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக