ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் வரும் மார்ச் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், அல்லது புதுப்பிக்கவும் அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான பாஸ்போர்ட், குறைந்த பட்சம் 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரையில் செல்லுபடியுள்ளதாக இருப்பது அவசியம். முன்பதிவு இன்றி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். அதற்கான சிறப்பு முகாம் திருச்சி மற்றும் தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையங்களில் வரும் 23ம் தேதி நடைபெறுகின்றது. அன்று காலை 9 மணி முதல் 11 மணிவரையில் புதிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
அதன்பின்னர் விண்ணப்பங்கள் குறித்த பரிசீலனை நடைபெறும். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்த நகல் மட்டும் இருந்தால் போதுமானது. தேதி நேரம் குறித்த முன்பதிவு அவசியமில்லை.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீஸ் சான்றுகள் சிறப்பு தகுதியின் அடிப்படையில் டிஎஸ்பி அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டு அதன்பின்னர் பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே ஹஜ் பயணம் மேற்கொள்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் தொடர்பான பிற குறைதீர் மனுக்கள் பரிசீலனை வரும் 25ம் தேதி முதல் மார்ச் 20 வரையில் நடைபெறும்.
இந்த தகவலை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக