Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 பிப்ரவரி, 2013

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.
ஹைதராபாத் பழைய நகரத்தில்  உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ். மிகவும் எச்சரிக்கையுடனே விசாரணை நடந்துவருவதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் குறிவைத்து விசாரணை நடக்கவில்லை என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா கூறியிருந்தபோதிலும் அதற்கு மாற்றமாகவே போலீசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சந்திரயான் குட்டாவுக்கு அருகில் உள்ள பந்த்லகுடாவில் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முஹம்மது ரயீசுத்தீன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்தது. இவரை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை தொடர்ந்து போலீஸ் 6
மாதங்களுக்கும் அதிகமாக கஸ்டடியில் வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னால் அரசு இவருக்கு நிரபாரதி என்பதை நிரூபிக்கும் சான்றிதழை வழங்கி விடுவித்தது. 4 வருடங்களுக்கு முன்னால் திருமணம் முடித்த ரயீஸின் வாழ்க்கை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சீர்குலைந்தது. விடுவிக்கப்பட்ட பிறகு தனது சொந்த வீட்டை விற்று மனைவி, 3 பிஞ்சுக்குழந்தைகள் மற்றும் தனது வயோதிக தாயாருடன் மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் ஹைதராபாத் குண்டுவெடிப்பின் பெயரால் இவரை மீண்டும் போலீஸ் வேட்டையாடியுள்ளது.
போலீஸ் பிடித்துச் சென்ற பிறகு ரயீஸ் எங்கிருக்கிறார் என்று தகவல் எதுவும் இல்லை. காசிகுடா துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
பல மாதங்கள் போலீஸ் கொடுமைகளுக்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய தனது மகனை போலீஸ் வாழ அனுமதிக்கவில்லை என்று ரயீஸின் தாயார் குல்சும் பீவி கூறுகிறார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக