மத்திய திரைப்பட தணிக்கை சட்டத்தை மறு ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது. பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்துள்ள இக்குழுவில் ஷர்மிளா தாகூர், கவிஞர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு மத்திய திரைப்பட தணிக்கை சட்டத்தை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை அளிக்கும்.
நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் அதனால் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்தே தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்னதாக விஸ்வரூபம் பட சர்ச்சை உச்சத்தில் இருந்தபோது, மத்திய திரைப்பட தணிக்கை சட்டத்தை திருத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் மணீஷ் திவாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக