Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 பிப்ரவரி, 2013

இந்திய அரச பயங்கரவாதம்:அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் அரசு!


பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று காலை 8:00 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.
அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக