Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 2 பிப்ரவரி, 2013

தர்மம் தலை காக்கும்...

தர்மம் தலை காக்கும்...
நேர்மையும்,செல்வமும், இறையச்சமும் கொண்ட முதியவர் ஒருவர் தனது மரணவேளை செருங்குவதை உணர்ந்தார். தன் மகனை தனது அருகாமையில் அழைத்து,“நான் இன்னும் சில நாட்களில் உங்களை விட்டு பிரிந்து இறைவனிடம் செல்ல போவதை உணர்கிறேன். என் மரணத்திற்கு பின் குளிப்பாட்டி கஃபனிடும் போது எனது காலுறைகளில் (SOCKS) ஒன்றை எனக்கு அணிவிக்க வேண்டும், இதனை எனது கடைசி ஆசையாக உன்னிடம் கேட்கிறேன்” என்று கூறினார்.
முதியவர் தான் உணர்ந்தவதாறே மரணத்தை எய்தினார். தான் சம்பாதித்த செல்வங்களையும், மக்களையும் விட்டுச் சென்றார். உறவினர்களும் நண்பர்களும் ஜனாஸாவை காண வந்த வண்ணம் உள்ளனர். ஜனாஸா குளிப்பாட்டப் பட்டு கஃபனிடும் தருவாயில் தந்தை கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே தேடித்தரிந்து தந்தையின் காலுறையை கொண்டு வந்து அணிவிக்க முனைந்தார் மகன்.

குளிப்பாட்டுபவர் இவற்றை அணிவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று கூறினார். தன் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார். குளிப்பாட்டுபவர் கூறினார். நீங்கள் சென்று இஸ்லாமிய அறிஞர்களிடமும் இமாம்களிடம் இத்தகு செயலுக்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா? என்று அறிந்து வாருங்கள்” என்று கூறினார்.
இவ்வாறு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே முதியவரின் நண்பர் வருகை தந்தார். கையில் ஒரு காகிதத்துடன் என் அருமை சகோதரரின் மகனே! நீர் உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் கண்டு மகிழ்ச்சிக் அடைகிறேன். இதோ தன் மகனுக்கு என்று உன் தந்தை என்னிடம் கொடுக்கும் படி உன் தந்தை கூறியிருந்தார்” என்று கூறினார்.
தந்தையின் கடிதம் “என் அருமை மகனே! என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்தாய், முடியவில்லை. போதிய செல்வாக்கும், நிறைந்த செல்வங்களையும் அனுபவித்து பின் அவற்றை விட்டு சென்ற எனக்கு ஒரு காலுறையை கூட அணிய முடியவில்லை பார்த்தாயா? சில முழங்களால் ஆன துணி மட்டும் தான் நாம் இவ்வுலகில் இருந்து எடுத்துச் செல்லும் ஒரே பொருள். இதை தவிர, அல்லாஹ் நமக்கு அருளிய செல்வத்தையும், பொருளையும் கொண்டு நாம் செய்யும் தான தருமங்களும் வரும். இவை தான் நமக்கு மறுமையில் இறைவனிடத்தில் சிறந்த அந்தஸ்தை பெற்றுத் தரும்.  “நபி(ஸல்) கூறினார்கள்.ஒரு மனிதர் மரணித்த பின் மூன்று செயல்கள் மட்டுமே அவரை பின் தொடரும்.அவை...
1.குடும்பத்தினர்
2.செல்வம்
3.செயல்கள்
இவற்றுள் செல்வங்களும் குடும்பத்தினரும் திரும்பி வந்து விடுவார்கள்.
அதையும் இன்னும் சற்று நேரத்தில் காண்பாய் “நான் செய்த செயல்கள் மட்டும் தான் என்னுடன் நிலைத்திருக்கும்”.
“ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தை சுவைக்க கூடியதாகும். இன்னும் உங்கள் கூலிகளை நீங்கள் பூரணமாக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே எவர் நெருப்பை விட்டும் தூரம் ஆக்கப்பட்டு, சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர்,திட்டமாக வெற்றியடைந்து விட்டார். மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய இன்பத்தை தவிர வேறில்லை” இதை நான் சொல்லவில்லை, அல்லாஹ்(3:185) குர்ஆனில் கூறியுள்ளான்.
நான் இன்ற அடைந்திருக்கும் நிலையை நீயும் கண்டிப்பாக ஒர நாள் அடையக் கூடும். அதற்கு முன்னால் உன்னுடைய செயல்களை சீராக்கி அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து ஈருலகிலும் வெற்றி பெறுவாயாக”
இந்த தந்தையின் அறிவுரையை நாமும் ஏற்று செயல்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக