Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய ஆசிரியர் படிப்பு B.I.S.Ed.


தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்; அதற்கு இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிக் கூடங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலையாய நோக்கம்.

இன்ஷா அல்லாஹ் 2030க்குள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே அல்லும்பகலும் அயராது உழைத்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களின் முக்கிய கருத்தாகவும் இதை வலியுறுத்தி வருகின்றோம்.
தற்கால நடைமுறையில் இஸ்லாமிய நர்சரி & பிரைமரி பள்ளிக்கூடங்களை உருவாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இஸ்லாமியப் பள்ளிகளில் பாடம் நடத்தும் சிறப்புத் தகுதியைப் பெற்ற ஆசிரியைகள் இல்லாதது பெரும் தடையாக இருக்கிறது.
மார்க்க அறிவோடு ஆங்கில மொழிப் புலமைப் பெற்ற ஆசிரியைகள்தான் இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிகளில் பணியாற்றத் தகுதியுடையவர்களாகிறார்கள். தற்போது மார்க்கம் கற்றுத் தர ஆலிமா, ஆங்கிலம் கற்றுத்தர ஆங்கில ஆசிரியை என்று இரட்டைச் சுமைகளை தற்போதைய இஸ்லாமிய பள்ளிகள் சுமக்கின்றன. பாடத்தில் மட்டுமல்லாமல் பயிற்றுவிப்பு வழிமுறையிலும் கலாச்சார போதனை முறைகளிலும் பள்ளிக்கூடங்களை இன்றைய காலத்திற்கு தகுந்தாற்போல இலாபகரமாக நிர்வகிப்பதிலும் கூட ஆசிரியை மற்றும் அவர்களின் தகுதியில் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த ஆரம்பப் பள்ளிக் கல்வி முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்த துறையாகவே இருக்கிறது. நூறு விழுக்காடு வேலைவாய்ப்புகள் நிறைந்த இந்தத் துறையில் நமது பெண்களை அதிகம் உருவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் காரைக்காலில் அந்நிஸா அகாடமி என்ற உயர்கல்வி நிறுவனம் அல் ஃபுர்கான் அறக்கட்டளை சார்பில் 19-06-2011 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.
+2 முடிந்த மாணவிகளுக்காக மூன்றாம் ஆண்டுப் பட்டப் படிப்பு B.I.S.Ed.(Bachelor of Islamic School Education) என்ற படிப்பு இங்கு கற்றுத் தரப்படுகிறது. அதில் ஆலிமா படிப்பு பி.ஏ., ஆங்கிலம் (அழகப்பா பல்கலைக்கழகம்) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, இயற்கை வைத்தியம், இஸ்லாமிய பயிற்றுவிப்பு முறை போன்றவற்றோடு அரபு மொழி, ஆங்கில மொழி சிறப்புப் பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளனர்.
தரமான உணவு பாதுகாப்பான தங்கும் வசதிகளோடு முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியைகளின் நுணுக்கமான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.
இந்நிறுவனத்தில் பயின்று பட்டம் பெறும் பெண்கள் தங்கள் பகுதிகளில் ஒரு இஸ்லாமியப் பள்ளியைத் துவக்கி இலாபகரமாக நடத்தும் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்படுவார்கள்.
மேலும், இவர்களுக்கு மேற்படிப்பு படிக்கவும், ஆசிரியைப் பணி, அரசுப் பணி, இயற்கை மருத்துவர் போன்றத் துறைகளில் வேலைவாய்ப்புகள் நூறு விழுக்காடு உறுதி செய்யப்படுகின்றன.
இந்த அரிய வாய்ப்பை முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பயனுள்ள கல்வியைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்து சமுதாயத்தில் கல்வி மறுமலர்ச்சியில் பங்காற்றிட வேண்டும்.
மாணவிகள் சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இன்ஷா அல்லாஹ் 2030க்குள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே அல்லும்பகலும் அயராது உழைத்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களின் முக்கிய கருத்தாகவும் இதை வலியுறுத்தி வருகின்றோம்.மாணவிகள் சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
ANNAI KADEEJA ARTS AND SICENCE WOMENS COLLAGE. JAMATH COMPLEX, NORTH STREET. AMAPAITNAM. PUTHUKOTAI . PHONE; 75984 61650 / 93821 55780 / 94881 58015.

தகவல் மின்னஞ்சல் மூலமாக

1 கருத்து:

  1. அல்ஹம்துல்லாஹ் நல்ல முயற்ச்சி
    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் ... இன்ஷால்லாஹ்

    உங்கள் சகோதரன் ** ஒலி முஹம்மத் இல்யாஸ் **

    பதிலளிநீக்கு