Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் -அம்பலப்பட்டான் கமல் என்ற அயோக்கியன் ( தயவு செய்து முழுவதும் படியுங்கள் )


அமெரிக்க ராணுவத்தினர் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் - இது விஸ்வரூபத்தில் மனித நேயர் கமல் எழுதிய வசனம்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சம் , வியட்நாம் போரில் கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 20 முதல் 30 லட்சம் அதில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர், ஆப்கன் போரில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அதிலும் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள் - உலகஞானி கமலுக்கு இந்த சாதாரண விவரம் தெரியாமல் போனது ஆச்சர்யமே....

நாங்கள் போரை தேர்ந்தெடுக்கவில்லை போர் தான் எங்களை தேர்ந்தெடுத்தது , எங்கள் கையில் ஆயுதங்கள் இல்லை ஆயுதங்களின் கையில் தான் எங்கள் உடல் உள்ளது - இது படத்தில் வரும் ஒரு பாடல் வரி , ஆனால் இந்த உண்மை படத்தில் ஒரு இடத்தில் கூட பதிவு செய்யப்படவில்லை...

இஸ்லாமியர்கள் ரத்தவெறி பிடித்தவர்கள் , அமெரிக்கா உலகை காபந்து செய்கிறது , அமெரிக்க கைகூலியான ஒரு இஸ்லாமியனே நல்ல இஸ்லாமியன் , போன்ற விஷ விதைகளை படம் வலுவாக விதைக்கிறது , இஸ்லாமியர்கள் வேறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேறு பயங்கரவாதம் செய்பவர்கள் வேறு என்ற புரிதலை சாமான்யனுக்கு ஏற்படுத்தாமல் வஞ்சகமாக கடந்து சென்றுள்ளார் உலகநாய்கன்

உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதத்தின் வேர் அமெரிக்க முதலாளிகளின் நலனுடன் பினைந்துள்ளது , வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்துக்காகவும் , உலகெங்கிலும் அமெரிக்கா நடத்தும் கொள்ளையை மறைக்கவும் , அமெரிக்கா திட்டமிட்டு பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது , அதற்கு மத அடிப்படைவாதத்தை பயன்படுத்தி அடிப்படைவாதிகளை பயங்கரவாதிகளாக மாற்றுகிறது... , உலக சமூகமும் தன் மீதான சுரண்டலை மறந்து பயங்கரவாதத்தின் மீது தன் முழு கவனத்தையும் கோபத்தையும் செலுத்துகிறது.....

பயங்கரவாதத்தில் அமெரிக்காவின் பிரதான முகத்தை மறைத்து ஒருவன் படமெடுக்கிறானென்றால் அவன் நிச்சயம் உலகநாயகன் அல்ல உலக மகா அயோக்கியன்.....

சரி , ஆக்க ரீதியாக( making point of view ) பார்த்தாலும் படம் படு படு படு படு சுமாரான படமே... , non - linear ஆக செல்லும் திரைக்கதை என்பதாலேயே இப்படம் விறுவிறுப்பான படமாகிவிடாது , ஆப்கான் துயரம் குறித்த உணமையான பதிவும் இல்லை , திரில் படத்துக்குரிய விறுவிறுப்பான திரைக்கதையும் இல்லை ,சில அழகான ஷாட்டுகளால் மட்டுமே படம் நல்ல படமாகி விடாது , இந்த இந்த ஒரு மாத சர்ச்சைகள் இல்லையென்றால் படம் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... , ராஜ்கமல் பிலிம்ஸ் செய்யாத விளம்பரத்தை இஸ்லாமிய அமைப்புகளும் தமிழக அரசும் படத்திற்கு செய்து தந்து விட்டன

தனது ஹாலிவுட் பட கனவுகளுக்காக இஸ்லாமிய சகோதரர்களின் மீது வன்மம் விதைத்திருக்கிறார் இந்த மனிதநேயர் கமல்ஹாசன்

படத்தில் வருவது போல் உண்மையிலேயே கமல் அமெரிக்க கைகூலியாக மாறி விட்டாரோ என்று தோன்றுகிறது….

அமெரிக்காவும் இத்தகைய கைகூலிகளும் செய்யும் சூழ்ச்சிக்கான விளைவை நாளை தலைமுறை அறுவடை செய்யப் போகிறது , ஆனால் விதைநீங்க போட்டதுதான் தேவர் மகனே… , நீங்க நல்லவரா கெட்டவரா ? இப்போ தெரிந்து விட்டது கலைஞானி அவர்களே ..

ஒரு 15 வருடமாகவே நான் உங்களின் தீவிர ரசிகன் , முற்போகு வேடத்தில் உலவும் பேராபத்தான உங்களின் தீவிர இருந்த அந்த 15 வருடங்களுக்காக இப்போது வெட்கப்படுகிறேன்

இங்கிருக்கும் புகைப்படம், வியட்னாமை தாக்கிய ரத்தவெறி அமெரிக்காவின் கொடுமைகளுல் ஒன்று...

படத்தை படமாக பாருங்கள் உங்கள் அரசியலோடு பார்க்காதீர்கள் என்று அறிவுரைக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஒன்று மட்டும் , இந்த புகைப்படத்தை படமாக மட்டும் பார்ப்பீர்களா அல்லது உங்கள் மனிதநேயத்தோடும் பார்ப்பீர்களா ??.. மனிதநேயத்தோடு மட்டும் பார்த்து இதன் பின்னிருக்கும் அரசியலை பார்க்காமல் கடந்து சென்றீர்களானால் , அந்த மனிதநேயத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.... ,

எனக்கு தவறான அரசியலை கற்றுத் தர முயற்சிக்கும் படத்தை நான் அரசியலோடுதான் பார்ப்பேன் , விமர்சிப்பேன் ... கைகூலிகளின் கேமராக்களுக்கு எதிராக விரைவில் எனது கேமராவும் முழங்கும், அரசியலோடும் அழகியலோடும்....

படத்தில் ஒரு காட்சியில் பயங்கரவாதிகள் தலைவன் அமெரிக்க கைதியிடம் உங்கள் நாடு எங்களுக்கு என்ன செய்ததோ அதையே நாங்கள் உனக்கு செய்வோம் என்று கூறுவான் , ஆம் அமெரிக்கா இஸ்லாமிய தேசங்களுக்கு என்ன செய்தது ???... பயங்கரவாதம் விளைவே அதன் காரணம் ???...
அதனை உரத்து சொல்பவனே உண்மையான கலைஞன் உலக நாயகன்....

மின்னஞ்சல் மூலமாக
சர்புதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக