Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கூடா நட்பு! கேடாய் முடியும்!


கூடா நட்பு ( JOINED IN ARMS ) கேடாய் முடியும்
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
சேரா நிரந்தவர் நட்பு – திருக்குறள்
(மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டைக் கல்லுக்கு ஒப்பாகும்)
அன்பான வேண்டுகோள்....
இக்கட்டுரையைப் படித்து முடிக்கும் வரை தானாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ( Do not do any prejudice ) கட்டுரையை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் – ஆர்
பேரூராட்சி துணைத்தலைவர் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு
இல்லாதவர். மேற்கு ஜமாத்தின் தீர்மானங்களை பல முறை மீறியவர். இவர் உறுவாகிய விதமும் இவரை பாதுகாக்க மேற்கு ஜமாத் நிர்வாகிகள் எடுக்கும் நடவடிக்கைகளும் ஊரின் நலவிரும்பிகளின் கண்டனத்தை சந்தித்து வருகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் --- பூனை கண்னை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்பார்களே அது போலதான்.
ஒரு காலம் இருந்தது. அப்போது இருந்த நிர்வாகிகள் ஊர் நலனே முக்கிய பிரச்சனையாக கருதி வந்தனர்.அதுக்கும் முக்கிய துவம் கொடுத்து வந்தனர். பின்பு வந்த நிர்வாகமும் இதையே செய்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள நிர்வாகமும் அதில் உள்ள உறுப்பினர்களும் இவரை பேரூராட்சி தலைவருக்கு முன்மொழிந்தனர். இதை மக்கள் முன்னுருத்தி மக்களையும் ஒரு முட்டாளாக்கினர். ஏனெனில் நிர்வாகம் எதை சென்னாலும் தலையாட்டுவர்கள் தான் இந்த (தீன் இயக்கத்திற்கும் இது பொருந்தும்) மக்கள். ஆனால் இதிலும் அன்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் திருமணம், பொது பிரச்சனைகள் என இரண்டு சுன்னத்துவல் ஜமாத்தார்கள் உறவு கடந்த ( பேரூராட்சி தேர்தலுக்கு முன்தின) காலங்களில் அறுமையாக செய்த வந்தனர். ஆனால் பேரூராட்சி தேர்தல் விசயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த ஊருக்கு ஏற்பட்டது தர்தினம். இத்துடன் பேரூராட்சி தலைவர்வுடன் ஓர் ரகசிய ஒப்பந்தம் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் முயச்சித்து வந்தனர். அதற்கு முன்பு வரை அவர் ஓர் ஜமாத்துக்கு கட்டுப்படாதவர், ஜமாத்தை எதிர்த்து அதிகமான வேலை செய்தவர்.
மேற்கு ஜமாத் நிர்வாகிகளுக்கு முக்கிய கூட்டாளியாக பேரூராட்சி து.தலைவர் என்று கடந்த காலங்களில் அவர் மேல் செல்லும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை என ஒரு வார்ட் உறுப்பினர் தெரிவித்தள்ளார்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் நட்பு கொள்வதில் என்ன தவறு ? இதனை ஏன் நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டும் ? முதலில் நாம் கூறிய வரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்தால் இதற்கான பதில் கிடைத்து விடும். இவர்கள் கூட்டனியால் நாம் அனுபவித்து வரும் பலனை தான் சமீப காலமாக கண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களாக நமதூரில் ஆற்றங்கரையேறம் உள்ள வீடு, ஜமாலியா நகர் போன்ற பிரச்சனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதை நாம் கண்டு வருகிறோம். இந்த பிரச்சனை இந்த அளவிற்கு விச்வரூபம் எடுத்தற்கு யார் காரணம் என்பதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம். ஊரின் ஸ்திரதன்மையும் முன்னேற்றத்தையும் குலைப்பதற்கு இவர்கள் பேரூராட்சி து.தலைவருடன் கைகோர்த்து செயல்ப(டாமல்)ட்டு வருகின்றனர் என்பதை தான் இது காட்டுகிறது.
அத்துடன் ஆத்துபக்கத்தில் நடைபெற்ற சர்வே நமக்கு ஏற்படுத்தும் சந்தேகங்கள். இதில் சந்தேகத்திற்கு இடமாகியுள்ள பேரூராட்சி து.தலைவர் தொடர்பும் பேரூராட்சி து.தலைவரை இதுவரை ஜமாத்தில் கூப்பிட்டு விசாரிக்கப் படவில்லை. ஆத்துயேரம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெறும் விஷயங்கள் மர்மங்கள் நிறைந்ததாக இருப்பதை அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நாங்கள் மேற்கு ஜமாத் செல்லிதான் இவர்களுக்கு ஓட்டு போட்டோம். ஆனால் நிர்வாகம் இது வரை இதை பற்றி பொது மக்களை கூப்பிட்டு எந்த ஒரு ஆலோசனையும் எடுக்க வில்லை. பேரூராட்சி து.தலைவரை கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை.
இது மேற்கு ஜமாத்தின் நிலை இதுவென்றால் , கிழக்கு ஜமாத்தும் இதற்கு விதிவிலக்கில்லாமல் செயல் பட்டு வருகிறது. ஏற்கனவே முன்னால் பேரூராட்சி தலைவருடன் கொண்ட நட்பிற்கான விலையை கிழக்கு ஜமாத் கொடுத்து வருகிறது. இன்னிலையில் முன்னால் கிழக்கு ஜமாத்தில் முக்கிய பொருப்பில் வகித்தவர் கூட பேரூராட்சி தேர்தல் சமயத்தில் மறைமுகமாக செய்த பிரச்சாரத்தை நினைத்து சிறிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை! இந்த ஒரு முறை பேரூராட்சி ஓட்டு இவருக்கு போடுங்கஎன்பதை மறைமுகமாக தாம் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அறிவுடைய மனிதன் எவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிழக்கு ஜமாத்தின் அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும் வாக்காகவே இது நமக்கு புலப்பட்டது.
இதனால் இவர்கள் ஒருவரையெருவர் பகைத்துக் கொள்வதற்கு இவர்கள் பேரூராட்சி தலைவரை நாடிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது.
ஆக பேரூராட்சி நிர்வாகம் தனித்து செயல்பட்டாலும் கூட அதற்கு இந்த நிர்வாகங்கள் ஒன்றினைந்து செயல்படுமா? முட்டுக்கட்டையிடுமா ? என்பது நம் உள்ளத்தில் எழுகின்ற மர்ம கேள்விகளாக உள்ளது.
நமது நிருபர்.   

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும், அன்புள்ள நமதூர் மக்களே,நாம் என்னதான் சொன்னாலும், எழுதினாலும்,இவர்கள் மாறப்போவது இல்லை.இவர்களுக்குள் இருக்கும் ஈகோ,போட்டி,பொறாமையால்,ஊர் நலந்தான் பாதிக்கப்படுகிறது.இவர்களால் ஊரில் மேலும் பிரச்சினைகள் வளருமே ஒழிய,உள்ள பிரச்சனைகள் தீரப்போவது இல்லை.இதற்கு ஒரே வழி மக்கள் எழுச்சிதான். ஊர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்றினைந்து போராடினால்தான் ஏதாவது நடக்கும்.இவர்கள் (மேற்கு,கிழக்கு ஜமாத்துகள்)போடும் பங்காளி சண்டையால் நம் ஊரின் மதிப்பு காவல் துறையிலும்,அரசு துறைகளிலும், கேவலப்பட்டு நிற்கிறது.படித்தவர்களும்,பண்பாளர்களும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி செல்வதால்தான் ,ஊர் நிர்வாகம் (ஜமாத்துகள் மற்றும் பேரூராட்சி) மார்க்க அறிவு,உலக அறிவு,ஊர் நலனில் அக்கறை இல்லாத மூடர்கள்(மூர்க்கர்கள்) கையில் சென்றுகொண்டுள்ளது.
    முதன் முறையாக அ.தி.மு.க வெற்றி பெற்று வந்ததும் ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி நம் ஊரின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு
    நம்பிக்கை மக்களிடம் சிதைந்து வருகிறது.ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதைதான் இவர்கள் அடிக்கும் கூத்து காட்டுகிறது.இனியாவது இவர்களை நம்பாமல் அடுத்து என்ன செய்யலாம் என் நம் ஊரின் நலனில் அக்கறை உள்ள நடுநிலையாளர்கள் சிந்திப்பார்களா? உலகில் நீங்கள் எங்கிருந்தாலும், நாம் பிறந்த மண்ணின் துயரங்களில் சிக்கி தவிக்கும் நம் மக்களின் கண்ணீர் துடைக்க உங்களால் இயன்ற உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்த வலைதளத்தின் மூலம் தந்து உதவலாமே? !!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும், காலத்துக்கு ஏற்ற அறுமையான தகவல்கள்.இதை உறியவர்கள் சிந்திப்பார்களா ? பொது ஜனங்களும் இப்பையாவது செரனையேடு இருப்பார்களா?

    பதிலளிநீக்கு
  3. சகோதரர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,


    இரு கையாலாகாத ஜமாஅத் நிர்வாகம்.கல்யாணத்துக்கும் நிச்சயதார்த்ததிற்கு மட்டும் வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடலான இவங்களுக்கு வரும் பாரு கோபம் வாயில வருது.இப்பொழுது நமது ஊர் ஒரு மிகப் பெரிய பிரச்சனையை சந்திக்க இருக்கிறது.அந்த ஆற்றங்கரையோர வீடுகள் பிரச்சனை.இதற்க்கு மட்டும் நமது ஜமாத் ஒரு சரியான தீர்வை எடுக்காமல் இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவங்களுக்கு.

    நீங்கள் சொல்வது போல் இந்த பிரச்சனைகளை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க் கொண்டால் மட்டுமே வெற்றி காண முடியும் இன்ஷா அல்லாஹ்

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  4. இரு கையாலாகாத ஜமாஅத் நிர்வாகம்.கல்யாணத்துக்கும் நிச்சயதார்த்ததிற்கு மட்டும் வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடலான இவங்களுக்கு வரும் பாரு கோபம் வாயில வருது 100% unmai

    பதிலளிநீக்கு