Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு – இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!


சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே  சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் விவகாரம் குறித்து உள்துறைச்செயலர், கமலஹாசன், இஸ்லாமிய பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஐந்து மணிநேரம் நீண்ட  இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

சர்ச்சைக்குரிய இப்படத்திலிருந்து 15 காட்சிகளை நீக்கவேண்டும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பினர்  பேச்சுவார்த்தையின் போது முன்வைத்தனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறால் அனைத்தையும் நீக்க முடியாது என்று கூறிய கமலஹாசன் 7 காட்சிகளை நீக்கவும், சில இடங்களில் வசனங்களின் ஒலியை நீக்கவும் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து  உள்துறைச்செயலர் முன்னிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் கமலஹாசனிடையே எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்லாமிய கூட்டமைப்பின்  பிரதிநிதிகள் கூறும்போது;
“விஸ்வரூபம் படத்தின் துவக்கக் காட்சியில் ‘இது உண்மைத் தொகுப்பு’ என்று இருந்தது. அதை மாற்றக் கோரினோம். அதன்படி  ‘இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே’ என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் 15 காட்சிகளை நீக்கக் கோரினோம்; அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டோம்.” என்றனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் கூறும்போது; “இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர், உள்துறைச் செயலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  இஸ்லாமிய சகோதரர்களுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.  இஸ்லாமிய சகோதரர்கள் கேட்டுக்கொண்ட சில காட்சிகளின் ஒலியை நீக்குகிறேன்.  எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிட் மனுவை வாபஸ் பெறுகிறோம். விஸ்வரூபம் மீதான தடையை அரசு நீக்கும் என்று நம்புகிறேன்.  விஸ்வருபம் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று என் ரசிகர்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.” என்றார் கமலஹாசன்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக