Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 7 பிப்ரவரி, 2013

டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்! போலீஸ் தடியடியால் பரபரப்பு!


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.
டெல்லி பல்கலைக்கழக மாணவரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினருமான முஹம்மது ஜாபிர் கூறியது: “மோடியின் வளர்ச்சி 2002-ஆம் ஆண்டு குஜராத் கண்ட இனப் படுகொலையாகும். வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு உரிமை இல்லை” என்றார்.
ஹிந்து கல்லூரியின் மாணவி தீபா சர்மா கூறியது: “குஜரத்தின் வளர்ச்சி என்பது பா.ஜ.கவின் “இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரம் போலவே கற்பனையாகும். குழந்தைகளும், பெண்களும் அனீமியா மூலம் மரணிக்கும் குஜராத்தில் வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு அருகதை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழக மாணவர் அஸத் அஷ்ரஃப் கூறியது: “மோடியின் கபட வளர்ச்சி வாதத்திற்கு எதிராக மாணவர்களின் எதிர்ப்பு தொடரும்” என்றார்.
போராட்டத்திற்கு பிறகு ஐந்தரை மணியளவில் போலீசார் கைது செய்தவர்களை விடுதலைச் செய்யக் கோரி மாணவர்களும், பேராசிரியர்களும் மவுரிஸ் நகர் போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற ஏ.பி.வி.பி., பா.ஜ.கவினர் மீது புகார் அளித்தனர். கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.கவினர் மீதான புகாரை பதிவுச் செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவு வரை மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
மோடி மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்தின் வெளியில் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிதூது ஆன்லைன்

1 கருத்து:

  1. இந்த நரபலி மோடியை வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதம் வேட்பாளராக நிருத்த பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,வி.ஹெச்.பி,இன்னும் நம் நாட்டிலுள்ள 2 டஜன் காவி பண்டார கூட்டங்கள் மக்களை மூலை சலவை செய்யும் வேலையை தொடங்கி உள்ளன.அதன் ஒரு பகுதிதான் இது. மோடியையும்,குஜராத்தையும் தூக்கிபிடித்து இல்லாததை இருப்பதாக படம் காட்டவும்,அந்த மாநில மக்களின் வேதனைகளை சாதனைகளாக காட்டவும்,மீடியாக்களுக்கு பெருமளவு பணம் கொடுக்கப்படுகிறது.இன்ஷா அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சி ஒரு நாளும் நடக்காது. பிரதம கனவில் மிதக்கும் பேடியே,நீ கொன்று குவித்த முஸ்லிம்களின் பிராத்தனையால் இறைவனின் தண்டனை உன்னை நெருங்கிக்கொண்டுள்ளது, உன்னுடைய நாட்கள் எண்ணப்படுகிறது என்பதை மறந்து விடாதே, நீ எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், மிக இழிவாகத்தான் உன் மரண்ம் இருக்கும், இன்ஷா அல்லாஹ் நம் பிராத்தனை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு