Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 பிப்ரவரி, 2013

முன்மாதிரியான கல்விக்கூடம்...


லப்பைக்குடிகாடு, தாருஸ்ஸலாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிச் செல்வங்களுக்காக சுற்றுலா ஒன்றை பள்ளிக்கூட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சிறு பிள்ளைகளின் உள்ளத்தில் அறிவியல் மற்றும் சுற்றுபுறசூழல் பராமறிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் எண்ணத்துடன் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பயனுள்ளதாக அமைந்திருந்தது. சுற்றுலாவை சிறப்பாக்கித் தந்த ஏக அல்லாஹுவுற்கே எல்லா புகழும். அல்லாஹ்வுக்கு நன்றியனைத்தும்.
      அறிவிக்கப் பட்டபடி பிள்ளைகளும், ஆசிரியைகள், நிர்வாகிகள் அனைவரும் ஜமாலி நகரில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 17-02-2013 ஞாயிறு காலை 7.00 மணியிலிருந்து வருகை தந்தார்கள். பிள்ளைகள் தத்தமது பெற்றோருடன் பயண புறப்பாடுவுக்கு காத்திருந்தார்கள். பயணத்திற்காக இரண்டு சிற்றுந்துகள் வந்து தயாராக இருந்தது. காலை 9.00 மணி சுமாருக்கு 80 குழந்தைகள், 14 ஊழியர்கள், நிர்வாகிகளுடன் அல்லாஹ்வின் பாதுகாவல் கேட்டு வாகணம் புறப்பட்டது. ஏகத்துவ பிரச்சாரத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட பள்ளிக்கூடமாக இருப்பதால், குறிப்பாக பயணத்தின் போது வாகனத்தில் கேளிக்கை பாடல்கள் தவிர்த்துக் கொள்ளப்பட்டது.
      திருச்சி விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் மையம், கோள் அரங்கம் (ANNA SCIENCE CENTRE, PLANETARIUM) நோக்கி வாகனம் பயணித்தது. இதற்கிடையே திருச்சி நகரில் 17-02-2013 அன்று அரசியல் மாநாடு நடப்பதனால், நாம் செல்லும் பயணத்தின் சாலை பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு போன்றவைகளுக்கு மங்களமேடு காவல்துறை ஆய்வாளர் மற்றும் உளவுத்துறை ஆய்வாளர் ஆகியோரிடம் வழக்க முறையீட்டை பூர்த்தி செய்து புறப்பட்டனர்.
      காலை 10.30 சுமாருக்கு அண்ணா அறிவியல் மையம், கோள் அரங்கம் வந்தடைந்தனர். பள்ளி மாணாக்கர்களுக்காக சலுகை நுழைவு கட்டணத்தை செலுத்தி பிள்ளைகளை கோள் அரங்கத்தை பார்வையிட்டனர். வானியல், வின் கோள்களின் வான் வழிப்பாதை விவரிக்கும் வண்ணம் அறிவியல் அரங்கம் அமைந்திருந்தது. ஒலிபெருக்கி விளக்கத்தை பிள்ளைகள் கேட்டறிந்தார்கள். அரங்கத்தில் அடுத்த பகுதியாக 3D ஒளி, ஒலி காட்சிக் கூடத்தில் பிள்ளைகள் அமர்ந்து காட்சி கண்டுகளித்தார்கள். இக்கோள் அரங்கில் மதியம் 12.30 வரை கழித்தனர்.
      அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் திருச்சி காவேரி கரையிலுள்ள முக்கொம்பூர் பூங்கா வந்தடைந்தனர். மதிய உணவு, ஓய்வு, தொழுகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பின், பிள்ளைகளை பூங்காவில் விளையாடினார்கள். பிள்ளைகள் பூங்காவில் விளையாடியது காணும்போது அத்தனை அழகாக இருந்ததாகவும், பிள்ளைகள் ஒழுக்கமாக நடந்துக்கொண்டதாகவும் ஆசிரியைகள் சொல்வதை கேட்டு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக இருக்கின்றார்கள். அகண்ட காவேரியின் எழிலையும், அதன் பூங்காவையும் கண்டு அனுபவித்தபின் பிள்ளைகளுடன் வாகனம் ஊர் திரும்பியது.
      பயனத்தின் போது, போதிய ஊழியர்கள் இருந்ததால் எல்லா நேரத்திலும், பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொண்டார்கள். பயன வாகனம் சுற்றுலா முடித்துக் கொண்டு இஷா ஜமாஅத் நேரத்தில் (7.45மணி) ஜமாலி நகர் வந்தடைந்தது. வாகனத்தை எதிர் நோக்கி இருந்த பெற்றொர்களிடம் அவர்களது பிள்ளைகளை ஜமாஅத் தலைவர் பஷீர் அஹமதுடன் பள்ளி தாளாலர் முஹமது பாட்ஷா ஆசிரியர் முன்னிண்டு ஒப்படைத்து அமானிதங்களை பூர்த்தி செய்தார்கள்.      அல்லாஹ் மிகப்பெரியவன்.      
தகவல் AGM பாஷா

4 கருத்துகள்:

  1. மாஷா அல்லாஹ், இவர்கள் பணி சிறக்க அனைவரும் துஆ செய்வோம், மார்க்க வரம்பிற்கு உட்பட்டு இஸ்லாமிய அடிப்படையில் நடைபெறும் இப்பள்ளியில் உங்கள் குழந்தைகளையும் சேர்த்து பயனடையலாமே. மாற்று மதத்து குழந்தைகள் கூட விழாக்களில் பிஸ்மில்லாஹ் கூறி உரைகளை தொடங்கி ஸலாம் கூறி முடிக்கும் அழகை வேறு பள்ளிகளில் காணக்கிடைக்காத காட்சி என்றால் அது மிகையில்லை. ஜஜாகுமுல்லாஹ் ஹைரன்.

    பதிலளிநீக்கு