Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வி.களத்தூர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுதலைக்கு மு.லீக் முயற்சி!


வி களத்தூரில் கலவரம் நடந்து நம் சமுதாய இளவல்கள் சிறையில் இருக்கிரார்கள். ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் விளம்பரம் போல் இதில் தலையிட்டால் கிடைக்காது என்பதால் எந்த அமைப்பில் தலைவரும் அங்கு தலை வைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் வழக்கம்போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமயகத்தின் சார்பில் அப்துல் ரஹ்மான் எம்.பி.தலைமையில் வந்த குழுவினர் சுமூகமான முறையில் பிரச்சினையை அணுகி சிறையில் உள்ள நமது சொந்தங்களை வெளியாக்கும் முயற்சியை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார். தயவு செய்து இந்த செய்தியை அனைவருக்கும் தெரிய படுத்தவும்...
வி.களத்தூர் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலிடக்குழு ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் சந்திப்பு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் நேரில் ஆய்வு 
திருச்சி, பிப். 1- பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூரில் இரு சமூகத்தின ருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அங்கு நடந்தது என்ன என்பதை கண்ட றிய வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ் மான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு இன்று ஆய்வு செய்தது.

கடந்த மாதம் 20-ம் தேதி வி. களத்தூரில் இரு சமூகத்தின ருக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. இரு சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வி. களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதை கண்டித்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட் டங்களை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஏ. அல்லாபிச்சை, செயலாளர் ஜி. சர்புதீன், பொருளாளர் ஏ. முஹம்மது அலி, மாநில பொதுக் குழு உறுப்பினர் முஹம்மது காசீம் ஆகியோர் நேரில் சென்று அங்கு நடந்த கலவரம் தொடர் பான சம்பவங்களை அறிக்கை தயாரித்து தலைமைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவத்தை தொடர்ந்து இதற்கு சுமூகத் தீர்வு காண வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், திருச்சி புறநகர் மாவட் டத் தலைவர் வி.எம். பாரூக், திருச்சி மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் ஜி.எம். ஹாஸிம் ஆகியோர் இன்று வி. களத்தூர் சென்று சம்பவங்களை நேரில் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தமீரஸ் அஹமது, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ராஜசேகரன் ஆகியோரை சந்தித்து இந்த சம்பவம் தொடர் பாக பேசினார்கள். 

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தமீரஸ் அஹமதுவை அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் குழு உறுப்பினர் கள் நீண்ட நேரம் விவாதித்தனர்.

அதுசமயம் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண் டும் என வற்புறுத்தினர். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து விளக்கம் கேட்டனர்.

இந்த ஆய்வுக்குழுவில் திருச்சி மாநகர மாவட்டத் தலைவர் உமர் ஃபாரூக், செயலா ளர் பீர் முஹம்மது, மாநகர இளை ஞர் அணிஅமைப்பாளர் அப்துல் ரஹ்மான், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அல்லாபிச்சை, செயலா ளர் சர்புதீன், பொருளாளர் முஹம்மது அலி, மாநில பொதுக் குழு உறுப்பினர் முஹம்மது ஷரீப், பெரம்பலூர் நகரப் பொரு ளார் முஹம்மது காஸீம் ஆகி யோர் கலந்து கொண்டனர். பின்னர் வி. களத்தூர் சென்று அங்குள்ள ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளி டம் ஆலோசனை நடத்தினார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக