Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

எல்லையில்லா “இழிநிலை“யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம்!


 ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற “அஜ்மீர் தர்கா” அமைந்துள்ள முக்கிய கடை வீதிகளில், ஆர்.எஸ்.எஸ் ன் சாகா பயிற்சி ஊர்வலத்தில், குண்டர்கள் மீது “மலர் தூவி வரவேற்க ” முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
நேற்று (03.02.2013) நடந்த “சகா பயிற்சி” ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ.எஸ் குண்டர்கள் மீது முஸ்லிம்கள்,மலர் தூவி வரவேற்றனர்.

ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.
விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது “பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது” சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இத்தனைக்கும், தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமாக “தப்லீக்” வேலைகள் நடக்கும் மாநிலமாக இரந்தும், தொழுகை போன்ற வணக்கங்கள் பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து சூழ்நிலைக்கு அஞ்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய இழிநிலையில் உள்ள இந்திய முஸ்லிம் சமூகத்துக்கு நாம் செய்யவேண்டிய பணிகள்,ஏராளம் ஏராளம்.

நன்றி மறுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக