Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

எழுச்சி பெறும் தவ்ஹீத் பிரச்சாரம்....


தெருமுனைப் பிரச்சாரம்.
      தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் மார்க்கப் பணிகளில் தெருமுனைப் பிரச்சாரம் என்கிற பணியும் ஒன்று. தொடர்ச்சியாக செய்யப் படாமல் விடுபட்ட இந்த பணியை மீண்டும் செய்யும் உயரிய நோக்கோடு, தற்போது நமதூரில் தொடர்ந்து நடத்திவருகின்றோம். இமாம் ஹாஃபிழ் அப்துல் முகத்திம் அவர்களின் ஆலோசனை பெற்று, வாரம் பிரதி வெள்ளிக்கிழமை மஃரிப் – இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஜமாஅத் பிரமுகர்கள் வீட்டின் முன், தெருவில் தோன்றி இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதென்று ஜமாஅத் சபையில் முடிவு செய்தது.
      அதன் தொடராக, வரும் 22-02-2013 வெள்ளிக்கிழமை மஃரிப் ஜமாஅத் தொழுகைக்குப்பின் 7.00 மணியளவில் பிஸ்மில்லாஹ் நகர் பிலால் அ.முஹமது அன்சாரி அவர்களின் வீட்டின் முன்புறம், இன்ஷா அல்லாஹ், தெருமுனைப் பிரச்சாரம் செய்ய ஜமாஅத் முடிவு செய்துள்ளது. நடக்கும் ஒருமணி நேர பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அனைத்து ஆண், பெண் விசுவாசிகளை அன்புடன் ஜமாஅத் சார்பாக அழைக்கின்றோம். சொற்பொழிவுக்குப் பின் பெண்களின் மார்க்க சந்தேக கேள்விகளூக்கு ஆலிமா வாஜிதா சித்தீக்கியா அவர்கள் பதிலளிப்பார்கள். பயனடையுங்கள்.
      இதுபோன்ற தெருமுனைப் பிரச்சாரம் ஃபாத்திமா (ரழி) தெருவில் 01-02-13 அன்று ஜமாஅத் துணைத்தலைவர் AGMபாஷா அவர்களின் வீட்டின் முன் நடைபெற்றது. சுமார் 70 பெண்களும், 20 ஆண்களும் கலந்து, ஹாஃபிழ் அப்துல் முகத்திம் அவர்களின் ‘நன்மையை ஏவி தீமையை தடுங்கள்’ என்ற தலைப்பில் பேசிய சொற்பொழிவை கேட்டு பயனடைந்தார்கள்.
      மறுவாரம் 08-02-13 அன்று அதே இடத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இரண்டாவது வாரம் நடப்பதால் மக்கள் ஆர்வம் அதிகமாக  காட்டி இமானின் சொற்பொழிவை கேட்க முன்பைக்காட்டிலும் அதிகமானோர் வந்திருந்தனர். அன்றைய தலைப்பு ‘திருக்குர்ஆன் ஒரு திறந்த புத்தகம்’ என்பதாகும்.
      நாட்டாண்மை நகரில் அமைந்துள்ள தம்மம்பட்டி முஹமது இப்ராஹீம் (ரஃபா ரஃபீ மாமனார்) அவர்களின் வீட்டின் முன் 15-02-13ல் நாட்டாண்மை நகர மக்களின் பயனைக் கருதி நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் உழைப்பின் பயனை அல்லாஹ் நம் சமுதாயத்திற்கு ஆக்கித்தந்துள்ளான். ’சிறுமிகளை கண்காணிக்கும் பெற்றோர்’ என்ற தலைப்பில் பேசப்பட்டது. 
      இதுபோன்று வாரம் தவறாமல், நடைபெறும் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவும், பிரச்சாரத்தின் மூலம் பயன் பெறவும், மரணிக்கும் போது நாம் எல்லோரும் முஸ்லீமாகவே மரணிக்கும் பாக்கியம் பெற்றிடவும் அல்லாஹ்வின் அருளபெற பிராத்திபோம்.
      இன்னும், பிரதி திங்கள், வியாழன் தோறும் பெண்களுக்கான மார்க்க பயிற்சி வகுப்பு பிற்பகல் 2 முதல் 4மணி வரை, தாருஸ்ஸலாம் சிறார் மதரஸாவில் நடைபெறுவதால் இறை விசுவாசம் கொண்ட தாய்மார்களை பயன் பெற அழைக்கின்றோம்.
      தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்., ஜமாலி நகர், லப்பைக்குடிகாடு. பதிவு AGMபாஷா            

1 கருத்து:

  1. அசலாமு அலைக்கும்

    மாஷா அல்லாஹ் , வாழ்த்துகள் . இது வெற்றிபெற, எல்லா தரப்பு மக்களை சென்றடய பொதுவான அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட நெறய விஷயம் இருக்கின்றது ஈமான் , நபி வழி , வரலாறுகள் , மட்டும் பொது இடத்திலும் , சர்ச்சைகுர்ய விஷயம் பள்ளியில் வைத்து செய்தால் நன்மையை நாடியவர்கள் ஆவீர்கள் , பழைய நோய் தாக்காமல் புதிசாலிதனதுடன் நடந்து கொள்வீர்கள் என்று நம்புஹின்றோம்

    பதிலளிநீக்கு