வியாழன், 31 அக்டோபர், 2013
புதன், 30 அக்டோபர், 2013
நமதூர் செய்தி எதிரொலி....
நமதூர் செய்தி எதிரொலி....
கடந்த ஜனவரி மாதம் நம்முடைய நிருபர் நேரடியாக சென்று நவாப் கோட்டையில் தற்போது நிலை என்ன என்று செய்தி சேகரித்து வந்து நமதூர் மக்களுக்காக வெளியிட்டோம். அல்ஹம்துலில்லாஹ்,அதனுடைய செய்தி எதிரொலியாக இப்போது தொல்லியல் துறையால் பாரமரிக்க ஏற்பாடு நடைபெற்றுள்ளது.இதுவும் ஒரு வகையான நமதூர் செய்திக்கு கிடைத்த வெற்றிதான். நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்தியின் லிங்கை பார்க்க அடைப்பில் உள்ள லிங்கை கிளிக்செய்யவும் ( http://labbaikudikadunews.blogspot.com/2013/01/blog-post_3741.html )
பழைய புகைப்படம்
24 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையால் புத்துயுர் பெறும் ரஞ்சன்குடி கோட்டை
செவ்வாய், 29 அக்டோபர், 2013
இறந்துபோனது சபியா மட்டுமல்ல இறந்த நிலையில் வாழும் மக்களும்தான்
சபியா நீ மீழாத் துகிலில் ஆழ்ந்துவிட்டு…!
எங்களையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டாயே…!
யாரும் எதிர்பாராத அந்த துர்சம்பவம் நிகழக்கூடாது என்றுதான் நாமும் ஆசைப்பட்டோம் ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பதுபோல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என்னைப்போன்ற எத்தனையோ மாணவர்களை முதல் மதிப்பெண் பெறவைத்து அழகுபார்த்த ரஹ்மான் சார் அவர்களின் கனவு பொய்த்துப்போனதேன்? மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சிபெறவேண்டிய நீ இப்படி அகால மரணமடைந்து விட்டாயே? காலம் கனிந்துவரும் வேலையில் காலன் உன்னை கவர்ந்து சென்றதேனோ? என்று புறியாமல் புலம்புகிறோம்.
கிருத்துவ மதத்திற்கு சொந்தமான பள்ளி பேருந்து, அதை ஓட்டியது இந்து மதத்தை சேர்ந்தவர், அதில் பலியாகிப்போனதோ முஸ்லிம் மாணவி. சபியா உன் மரணம்கூட சமூக நல்லிணக்கத்தை விதைத்தே சென்றுள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு உன் மரணம் வித்திட்டதால் நீயும்கூட தியாகிதான் நீ பெற்றதும் வீரமரணம்தான்.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!
சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.
13 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த 'முஷாவரத்' அமைப்பின் இரு பிரிவுகள்!
13 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த 'முஷாவரத்' அமைப்பின் இரு பிரிவுகள்!
உணர்வு பூர்வமான செய்தியாளர் சந்திப்பு!!
தமிழகத்திலும் பிரிந்தவர் ஒன்று படுவரா?
1964 ல் துவக்கப்பட்ட 'ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவரத்' அமைப்பில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'இரு பிரிவுகளாக' செயல்பட்டு வந்தனர்.
திங்கள், 28 அக்டோபர், 2013
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்!
காலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.
ஆபாசம்... எங்கு பார்த்தாலும் ஆபாசம்...! வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.
இதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன!
சனி, 26 அக்டோபர், 2013
அல்தாபி சொன்னதைப் போல் இவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா ?
அல்தாபி சொன்னதைப் போல் இவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா ?
10% இட ஒதுக்கீடு தந்தால் பாஜகவை ஆதரிக்கத் தயார் என தைரியமாக ஒரு முஸ்லிம் அமைப்பே சொல்லும் போது
காங்கிரசை வீழ்த்த தமிழருவி மணியன் ஆதரிப்பதாக சொல்வதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும் ?
முஸ்லிம் அமைப்பு போல பாஜக உடன் கூட்டணி என வாய் திறந்து சொல்லாத வைகோ வை ஏன் வசை பாட வேண்டும் ?
இன்னும் யாருடனுன் கூட்டணி என சொல்லாத நிலையில் விஜயகாந்தை ஏன் திட்ட வேண்டும் ?
மகனுக்கு மந்திரி பதவி கிடைத்தால் ராமதாஸ் ஆதரிப்பார் என ஏன் திட்ட வேண்டும் ?
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவின் நலனுக்காக பாஜக விடம் ஆதரவு கேட்டதை ஏன் எதிர்க்க வேண்டும் ?
வியாழன், 24 அக்டோபர், 2013
நமது நிருபரை கண் களங்கவைத்த மீன்.
நமது நிருபரை கண் களங்கவைத்த மீன்.
நமதூரில் உள்ள மேற்கு பள்ளிவாசலுக்கு நமது நிருபர் சென்ற வேலையில் எதார்த்தமாக ஹவ்ஜியில் உள்ள மீன்களை சந்திக்க நேரிட்டது. அப்பொழுது இயற்கை எழிலோடு விளையாடி கொண்டிருந்த மீன்கள் நமது நிருபரை சில கேள்விகளை கேட்டு திணரடித்தது.
கற்பணை மட்டுமே யார் மணதையும் புண்படுத்த அல்ல...
மீன் . பல பேர் இங்கு வராங்க போராங்க நீங்க மட்டும் என்ன குரு குரு பார்த்துட்டு போட்டா எடுக்குறீங்க!
புதன், 23 அக்டோபர், 2013
மழைக்கால நோய்கள் கவனம்!
தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக் கூடும்.
பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.
நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.
செவ்வாய், 22 அக்டோபர், 2013
மாவட்ட அளவில் நமதூர் மாணவிகள் சாதனை....
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அண்ணாவின் 105வது பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக அண்ணாவின் 105வது பிறந்த நாள் விழாவையொட்டி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பாலக்கரையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தொடரும் பயணங்கள் - பாகம் 2
உயிர்
உயிரும் உடலும்
இந்த மய்யத் என்ற
பெயரை நாம் பெறக்காரணம் நாம் நமது உடலில் உள்ள ரூஹை (உயிரை) இழக்கிறோம். நம்
உடம்பில் இருந்து ரூஹை நம்மைவிட்டு பிரியும் போது முடம், குருடு, செவிடு, ஊமை என்ற
அனைத்து முடியாமையையும் உள்ளடக்கிய அர்த்தத்தை கொண்ட மிக மிக பலஹீனமான நிலையைக்
கொண்ட மய்யத் என்ற பெயரை பெறுகிறோம்.
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
சனி, 19 அக்டோபர், 2013
வெள்ளி, 18 அக்டோபர், 2013
த மெசேஜ்: த ஹிந்து விமர்சனம்
இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.
செவ்வாய், 15 அக்டோபர், 2013
துபாயில் தியாகத் திருநாள் ......
அனவைருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (15.10.2013) துபையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
துபை தேராவிலுள்ள ஈத்காஹ் திடலில் நமது அமீரக நிருபரும் நமதூர் மக்களும் பலர் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டனர். தக்பீர் முழக்கங்கள் முடிந்தவுடன் சரியாக காலை 6.40 மணிக்கு தொழுகை ஆரம்பித்தது. அதன்பிறகு குத்பாப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
சனி, 12 அக்டோபர், 2013
உழைப்பு...
ஹஸ்ரத் இப்றாஹீம்(அலை) அவர்களும், மனைவி ஹாஜரா அம்மையாரும், பால்குடி மாறா பிஞ்சுக் குழந்தை இஸ்மாயீலும் மலைகள் நிரம்பிய மக்காவை நோக்கி பயணித்தனர். ஹஸ்ரத் ஜிப்ரயீல்(அலை) அவர்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டி.
மனித வரலாற்றிலேயே திருப்புமுனையாக அமைந்த மாண்புமிகு பயணமாக இருந்தது அது. மக்காவை அடைந்ததும் ஒரு மொட்டை மலைக்குன்றுக்கருகே ஹாஜரா அம்மையாரையும், குழந்தை இஸ்மாயீலையும் விட்டு விட்டுச் செல்லுமாறு ஜிப்ரயீல் பணித்தார். ஆளே இல்லாத அந்தப் பாலை வெளியில் இப்றாஹீம் (அலை) ஒரு சிறிய பந்தல்போல குடில் அமைத்து இருவரையும் அங்கே அமர்த்தி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள்.
பாபுலர் பிரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும்
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், தாக்கபடுவதற்காகவே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதையும் உணர்ந்த முஸ்லிம்கள் காவி தீவிரவாதிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்தின் காவலர்கள் என்பதையும் வெகுஜன மக்களுக்கு உணர்த்த முயன்றனர்.
வெள்ளி, 11 அக்டோபர், 2013
வியாழன், 10 அக்டோபர், 2013
புதன், 9 அக்டோபர், 2013
செவ்வாய், 8 அக்டோபர், 2013
திங்கள், 7 அக்டோபர், 2013
நமதூர் மக்களின் வாக்கும் ! ஜமாத்தின் நிலைமையும் ?
நமதூர் மக்களின் வாக்கும் ! ஜமாத்தின் நிலைமையும் ?
கடந்த மாதம் நாம் நம் தளத்திள் மக்களின் கருத்தை கேட்டு இருந்தோம். மேற்கு ஜமாத்திற்கு சொந்தமான புதிய கடை வாடகை விடும் சம்மந்தமாக எப்படி ,யார் யாருக்கு வாடகை விட வேண்டும் என நமதூர் மக்களிடம் ஓட்டு கேட்டு இருந்தோம். இது போன்ற செய்திற்கு நமதூர் மக்களிடம் நல்ல வரவேற்பு காண முடிந்தது. ஒரு சிலர் நமக்கு மின்னஞ்சல் மூலமாக கருத்து களையும் பகிர்ந்து கொண்டனர். வழக்கம் போல் ஊர் மேல் அக்கரை இல்லாதவர்களிடம்
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
பருவ நிலை மாற்றங்களால் பெரம்பலூர் மாவட்டம் பெரிதும் பாதிப்பு
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகளில் பெரம்பலூர் மாவட்டம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தெரியவந்துள்ளது.
மானாவாரி விவசாயத்துக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பருவ நிலை மாற்ற பின்னடைவு விவசாயத்துக்கான தேசிய முன்முயற்சி' எனும் திட்டத்தின்கீழ் வெளியான வரைபடத்தில் இது தெரியவந்துள்ளது.
பருவ நிலை மாற்றத்தால், நிலத்தடி நீர் குறைதல், மழைக்காலங்கள் மாறுபடுதல் போன்ற ஏராளமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. இவை விவசாயத்தை பெருமளவில் பாதிக்கின்றன. ஆகவே, இந்த பருவ நிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவாறு என்ன வகையான பயிர்களை விளைவித்தால் நன்மை பயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டு அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி அவற்றை இந்த முன் முயற்சியின் மூலம் செயல்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.
திருச்சி: பாஸ்போர்ட்டு விண்ணப்பத்தின் நிலை அறிய தொலைபேசியில் 24 மணிநேரமும் இலவசமாக தகவல் கிடைக்கும்
பாஸ்போர்ட்டு விண்ணப்பத்தின் நிலையை 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் அறிந்து கொள்ளலாம் என பாஸ்போர்ட்டு அதிகாரி பாலமுருகன் கூறினார்.
திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சி பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் மூலம் 2013 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் இறுதி வரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதே கால கட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.
ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி!
ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதி! ! ! ! ONLINE RENEWAL OF RATION CARDS IN TAMILNADU http://www.consumer.tn.gov.in/
ரேஷன் கார்டுகளை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளும் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ரேஷன் கார்டுக ள் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளே 2012 வருடத்துக்கும் செல்லும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அந்தந்த கடைகளில் சென்று கார்டை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும்.
சனி, 5 அக்டோபர், 2013
வெள்ளி, 4 அக்டோபர், 2013
செவ்வாய், 1 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)