Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 30 அக்டோபர், 2013

நமதூர் செய்தி எதிரொலி....

நமதூர் செய்தி எதிரொலி....

கடந்த ஜனவரி மாதம் நம்முடைய நிருபர் நேரடியாக சென்று நவாப் கோட்டையில் தற்போது நிலை என்ன என்று செய்தி சேகரித்து வந்து நமதூர் மக்களுக்காக வெளியிட்டோம். அல்ஹம்துலில்லாஹ்,அதனுடைய செய்தி எதிரொலியாக இப்போது தொல்லியல் துறையால் பாரமரிக்க ஏற்பாடு நடைபெற்றுள்ளது.இதுவும் ஒரு வகையான நமதூர் செய்திக்கு கிடைத்த வெற்றிதான். நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்தியின் லிங்கை பார்க்க அடைப்பில் உள்ள லிங்கை கிளிக்செய்யவும்http://labbaikudikadunews.blogspot.com/2013/01/blog-post_3741.html 


பழைய புகைப்படம்

24 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையால் புத்துயுர் பெறும் ரஞ்சன்குடி கோட்டை


24 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையால் ரஞ்சன்குடி கோட்டை பாபவிமோசனம் பெற்றுள்ளது. இங்கு சிதிலமடைந்த நிலையில் உள்ள படிகள், கோட்டை நுழைவுவாயில், மண்டபம் ஆகியவற்றை சீரமைக்கும் மராமத்துப் பணிகள் முனைப்புடன் தொடங்கியுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு சுற்றுலாத் துறையும் துணை நின்றால் ரஞ்சன்குடி கோட்டை இந்திய சுற்றுலா வரைபடத்தில் தனித்துவத்துடன் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

பாரம்பரியமிக்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்றுரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலம் ஒன்று உண்டு என்றால் அது ரஞ்சன்குடி கோட்டை மட்டும்தான். பெரம்பலூரிலிருந்து சென்னை செல் லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில், மங்கள மேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை அமைந்துள்ளது.

இங்கு 16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின் மீது அமைக்கப்பட்ட கோட் டையின் கட்டுமானப் பணி, தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் துவங்கப்பட்டது. இதற்கு ஆற்காடு நவாப் கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின் மீது கட்டப்பட்டதால் துருவத்துக் கோட்டை என பலப் பெயர்கள் உள்ளன.

சந்தா சாஹிப், பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமது அலி, ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டா போர் ரஞ்சன்குடி கோட் டையை மையமாக வைத்து நடைபெற்றதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இக்கோட்டையில் இன்றும் அழியாத அகழி, விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடி மேடை, தண்டனை கிணறு, வெடி மருந்து கிடங்கு, புறவழி சுரங்கப் பாதை, பிற்கால பாண்டியர் காலத்து மண் டபம், முகமதியர் காலத்து மசூதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாதவாறு துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரை லாயம், கடல் மட்டத்திலி ருந்து 152 அடி உயரமுள்ள கோட்டை உச்சியில் அமைந்துள்ள குளம் ஆகியன சாட்சிகளாக உள்ளன.

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோட்டை, ‘1958ம் ஆண்டு, பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல் பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சியபகுதிகள் சட்டத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த நினைவுச் சின்னத்தை அழிப்பவர்கள், அகற்றுகின்றவர், சிதைக்கின்றவர், மாற்றி அமைக்கின்றவர் எவராயினும், 2010ம் ஆண்டு பழங்கால நினைவுச்சின்னங்கள் தொல் பொருள்ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் படி சிறைத் தண்டனைக்கும், அபராதத்துக்கும் ஆளாகி தண்டிக்கப்படுவர்.

இதனிடையே, பொழுதுபோக்கு வசதியே இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தில், பழமையான இந்த சுற்றுலாத் தலத்தை பழமை மாறாமல் புதுப்பித்து, குடிநீர், கழிப்பிடம், தங்கும் வசதிகளை செய்து கொடுத்தால் வெளி மாவட்டத்தினரும், வெளிநாட்டினரும் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக உயரும்.

ஆனால், அதற்கான வழிகளை சுற்றுலாத் துறையும், தொல்லியல் துறையும் இணைந்து மேற்கொண்டால் மட்டுமே சாத்தியப்படும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் 24ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையே மனமுவந்து மராமத்துப் பணிகளை தற்போது மேற்கொள்வது சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டில் இக்கோட்டையில் இடிந்துகிடந்த பீரங்கி மேடை சரி செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் அதாவது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான், சென்னையில் உள்ள தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஒதுக்கீடு செய்துள்ள நிதியைக் கொண்டு, அத் துறையின் தஞ்சை உபசரக பராமரிப்பு அலுவலர் வாசு தேவன் மேற்பார்வையில் மராமத்துப் பணி கள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராமர் பாதம்பட்டு அகலிகை பாபவிமோசனம் பெறறது போல், தொல்லியல் துறையால் இந்த ரஞ்சன்குடி கோட்டைக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இக் கோட்டையின் பிரதான நுழைவுவாயில் இருபுறமும் இடிந்துகிடந்த சுவர்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மேல்கோட்டையிலிருந்து, கீழ்க்கோட் டை வரையில் இருக்கும் பழுதடைந்த படிக்கட்டுகளும், மேல்மண்டபத்தின் பழுதடைந்த கிழக்குச் சுவரும் முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு சுற்றுலாத் துறையும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, கோட்டையின் முன்புறத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

இவ்வாறு இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு சுற்றுலாத் துறையும் துணை நின்றால், அதன் மூலம் அனைத்துப் பணி களும் முழுமை பெற்றால் ரஞ்சன்குடி கோட்டை சிறந்த சுற்றுலாத்தலமாக இந்திய வரைபடத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கான பணிகளில் சுற்றுலாத் துறையை போர்க்கால அடிப்படையில் களமிறக்க மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

நன்றி தினகரன்

2 கருத்துகள்:

  1. முஹம்மது யூனுஸ்30 அக்டோபர், 2013 அன்று 11:48 PM

    மாஷா அல்லாஹ்..... நிச்சயமாக நல்ல ஓர் முயச்சி தான். கண்டிப்பாக நம்ம ஊர் வெப்சைட்டிற்கு ஓர் முன்மாதிரி என்பது உண்மைதான். இது போன்ற நல்ல விசயங்களை உண்மைக்கு உண்மையாக வெளியிடும் இற்த தளம் நம்ம ஊருக்கு ஓர் முன்னோடிதான். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. sam

    thalivara antha tvs 50 yaruthu namma ethu thana

    பதிலளிநீக்கு