பேரூராட்சி தலைவரை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு...
நாம் ஆரம்பத்தில் இந்த தலைப்பில் விமர்ச்சனம் செய்ய நமது
நிருபர் குழுவில் ஆலோசித்தோம். நிர்வாக குழு கொடுத்த அறிவுர்த்துதலின் பெயரில்
நாம் இந்த விமர்சனத்தை நமதூர் மக்களின் கருத்தாக பதிவு செய்கிறோம்.
நாம் ஏன் இந்த தலைப்பை எடுக்க காரணம் என்றால் கடந்த 8
மாதங்களாக பேரூராட்சி மன்றம் கூட்டம் நடைபெறாதனில் பேரூராட்சியில் என்ன தான்
நடைபெறுகிறது என்பது கூட வார்டு உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்பதாக ஒரு
உறப்பினர் ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறார். வார்டு உறுப்பினருக்கே தெரியவில்லை
என்றால் பாவம் ஜமாத் நம்பி ஓட்டு போட்டவர்களின் நிலை என்ன என்பதை செல்ல வேண்டியது
இல்லை.
இதை பற்றி நாம் நமதூர் மக்கள் இடத்தில் கேக்கப்பட்ட கருத்து
கணிப்பில் நமதூரிலும், அமீரகத்திலிருந்தும் நமதூர் மக்கள் தெரிவித்த கருத்துகளை
தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமே மக்கள் தான் உயர்ந்த அதிகாரம்
படைத்தவர்கள் என்று கூறுகிறது. (The Basic Principle in a Democracy is
that the people are supreme).
மக்களைத் தவிர நீதிபதிகள், சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள், மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து அதிகார
மட்டங்களும் மக்களுக்குப் பணி புரியும் வேலையாட்கள் (servants).
மிக உயரிய இந்தத் தத்துவத்தை ஒரு முறை நாம் மனதில் நிலையாக
நிறுத்திக் கொள்வோமேயானால், “ இந்திய தேசத்தில் மக்கள் தான் எஜமானர்கள் மற்ற அனைத்து அதிகார மட்டங்களும் (நீதி
மன்றங்கள் உட்பட) மக்களின் வேளைக்காரர்கள் ( Servants ) ” என்பதை மிகத்
தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த வேலைக்காரர்கள் தங்களுடைய பணியைக்
சரியாகச் செய்யவில்லை என்றாலோ (அ) முறையாக நடந்து கொள்ளவில்லையென்றாலோ, நிச்சயமாக
அந்த வேலைக்காரர்களை விமர்சனம் ( Criticise ) செய்வதற்கு முழு உரிமை உண்டு. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயக
அமைப்பில் பேரூராட்சி தலைவரை விமர்சனம் செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு.
(இது 2007 ஜனவரி 17 ம் நாள்
புதுடெல்லியில் உள்ள இந்தியன் சொசைட்டி ஆஃப் இன்டர் நேஷனல் லா என்ற ஆடிட்டோரியத்தில்
நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பு மிகு மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள்
கூறிய உறையின் ஒரு பகுதி)
நமதூர் மக்களின் கருத்து
வார்டு உறுப்பினர்கள் என்னதான்
செய்கிறார்கள். முறையாக நிர்வாகத்தை ஆலோசித்திருக்கலாம் அல்லது அனைத்து வார்டு
உறுப்பினரும் ஒன்று கூடி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றாவது அவர்களாவது
முயற்சித்திருக்கலாம்.
-
ரபி அஹமது
சுன்னத்துவல்
ஜமாத் நடைமுறைகளையும், ஊரின் நீதிக் கோட்பாடுகளையும் புறந்தள்ளி விட்டு
நிர்வாகிகளின் நலனுக்காக ரஜினிபாரூக்கை தலைவராக்கப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான
முன்னுதாரணம். இது வருங்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
- ஜூயாவுத்தீன்
இந்த சம்மவத்திற்கு முழு பொறுப்பும் நமது
ஜமாத்தையே சாரும்.
-முஹம்மது இப்ராஹிம்
சுன்னத்துவல்
ஜமாத் கட்டுகோப் மாற்ற முடியாது. ஆனால் இந்த நிர்வாகிகள் மாற்றும் மோசமான செயலை
முயற்சித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த லட்சனம்.
-
அப்துல் ரஹீம்
மேற்கு சுன்னத்துவல்
ஜமாத் மிகவும் மேசமான தவறிழைத்து விட்டது.
- சாகுல் ஹமீது
பஞ்சாயத்து
போர்ட் தேர்தலில் சுன்னத்துவல் ஜமாத் நிர்வாகிகளின் கரங்கள் ரகசியமாக
விளையாடியிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் ஊரின் ஒற்றுமையை விரும்புவர்கள். ஆனால்
இனி பேரூராட்சியின் விசயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
- துபாயில்
வசிக்கும் சேக்ராசித்
ஒரு குற்றத்தைச்
செய்யுங்கள், ஜமாத்தை எதிர்த்து நில்லுங்கள் உங்களுக்கு பேரூராட்சி தலைவர் பதவி
கொடுக்கப்படும். சுன்னத்துவல் ஜமாத் தீர்ப்பு.
-முஹம்மது இலியாஸ்
பள்ளி
வாசல் கப்ரஸ்தானில் மேற்கு ஜமாத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டார் நம்ம
பேரூராட்சி தலைவர். - தாவுத் அலி
“பேய்
அரசால் பிணம் தின்னும் சாத்தான்கள்“ என்ற பழமொழியை உண்மைப்படுத்துவது போல் உள்ளது
பேரூராட்சியின் கடந்த எட்டு மாத கால நிகழ்வு.
- பெயர் வெளியிட விரும்பாதவர்.
பேரூராட்சி
தலைவர் தாளத்திற்கு எற்ப ஆடும் ஒரு பொம்மை தான் மேற்கு ஜமாத் என்பதற்கு இந்த
சம்பவமே சான்றாக அமைந்துள்ளது. -
இம்தியாஜ் அஹமது
நீங்க எல்லாம் நல்லா வருவீங்க. - சம்சுதீன்
இனி
பொது விசயத்திற்கு நாம் ஒன்று சேர வில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று
கொண்டு தான் இருக்கும். முதலில் வெளிநாட்டில் உள்ள நம்ம மக்கள் ஒன்றினைய வேண்டும்.
-முஹம்மது
இத்ரீஸ்
நல்லவர்களைக்
கொண்டு, வல்லவர்களைக் கொண்டு, நெஞ்சில் ஈவு இரக்கம் உல்லவர்களைக் கொண்டு இனி
பேரூராட்சி தேர்தலில் முன்னிருத்த வேண்டும். - ரியாஜ்
துபை
இனி
லெப்பைக்குடிக்காடு ரஜினி பாரூக் கோட்டை ?!
- சாதிக்
பாஷா
இனியும்
இவர் (பேரூராட்சி ) தலைவர் திருந்த வில்லை என்றால் திருத்த படுவார்.
துபாயில்
உள்ள ஊர் பிரதிநிதி
அல்லாஹ் தன் திருமறையில் கூறும் எச்சரிக்கை
நாம்
அவர்களுக்களித்த அருளுக்கு நன்றி செலுத்தாது நிராகரித்தும் விடுகின்றனர். (இவ்வாறு
நிராகரிப்பவர்களே) நீங்கள் உங்கள் இஷ்டப்படி சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்.
(உங்கள் செயலின் பயனைப்) பின்னர் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அல்குர்ஆன்30: 34
இது மிகவும் வருத்தத்திற்குரியது , நாம் எப்போதும் மற்றவர்களை குறைசொல்லியே பலக்கப்பட்டுவிட்டோம் - அதன் வெளிப்பாடுதான் இந்த சில பொறுப்பில்லாத பதில்கள் / விமர்சனகள் .....
பதிலளிநீக்குதன்னுடைய பணியின் பொறுப்பை அறியாதவர்களை தேர்ந்தெடுத்தது யார்..?
இனி அவர்கள் செவ்வனே பணியாற்ற நாம் என்ன செய்ய வீண்டும் ?...
என்னுடையா குமுறல்கள் ஏராளம் , இதன் விடை மக்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் .....
-- முஹம்மது மீரான்
நீங்கள் சொல்லுவது சரியானது தான் சகோதரன் மீரான்
பதிலளிநீக்குநீங்கள் சொல்லுவது சரியானது தான் சகோதரன் மீரான்
பதிலளிநீக்குஇந்த அவலத்தை யாரிடம் சொல்வது. தமிழை தப்பும் தவறுமாக....
பதிலளிநீக்குஅதுவும் தலைப்பிலேயே......
அவள நிலை = அவல நிலை
அல்ஹம்துல்லாஹ் எங்களுடைய எழுத்தின் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.
நீக்குபேரூராட்சி தலைவர் தாளத்திற்கு எற்ப ஆடும் ஒரு பொம்மை தான் மேற்கு ஜமாத் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்குஇனியும் இவர் (பேரூராட்சி ) தலைவர் திருந்த வில்லை என்றால் திருத்த படுவார்.
பேரூராட்சி தலைவர் தாளத்திற்கு எற்ப ஆடும் ஒரு பொம்மை தான் மேற்கு ஜமாத் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்குஇனியும் இவர் (பேரூராட்சி ) தலைவர் திருந்த வில்லை என்றால் திருத்த படுவார்.
முதல்ல எங்க வகிறராக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பதை மாத்துங்க எங்க வகைராதன் ஊரு தலைவராக வரவேன்ன்டும் என்பதை நிறுத்துங்க .யாரு ஊருக்காக செய்பவர்களை தேர்ந்து எடுங்க .
பதிலளிநீக்கு