லப்பைக்குடிக்காடு விஸ்டம் ஆஙகிலப் பள்ளியில் மாணவர்கள் 23.10.2013 அன்று அறிவியல் கண் காட்சி நடத்தினார்கள்.
நுழைவு பாதையில் இருந்து கண் காட்சிக்காக ஸ்கவுட் மாணவர்கள் வரவேற்றனர். அருகிலே குடில் அமைத்து ஸ்கவுட் சம்மந்தமான விளக்கங்கள் மற்றும் செயல்முறைகள செய்து காட்டினார்கள்.யோகா பயற்சியும் செய்தனர்.
ஒவ்வொரு வகுப்புகளிலும் அறிவியலின் ஒவ்வொரு துறை சம்மந்தமான கண் காட்சி அமைத்து இருந்தனர். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளுக்கு தனித்தனி ரூம்கள் அமைத்து பெற்றோர்களை கவரந்தனர்.
அருகில் சென்று பார்க்கும் அனைவருக்கும் அழகாக விளக்கம் தந்தனர். தெர்மாகூல் அட்டைகள் கொண்டு வீடு, காடு என்று அழகாக வடிவமைத்து இருந்தனர். அதில் ஒரு மாணவன் விஸ்டம் பள்ளி போல தெர்மாகூல் கொண்டு செய்திருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்த அறிவியல் கண் காட்சி பற்றி பெற்றோர்களிடம் கேட்டதற்கு ஒரு மாதமாக இதற்காக தொல்லை செய்தார்கள், அது வேண்டும், இது வேணும் என்று கஷ்டப்படுத்தினார்கள் இப்ப இத பார்க்கும் போது சந்தோஷம் உண்டாயிடுச்சி என்றனர் பெருமையாக.
பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டதற்கு ஒவ்வொரு வருடமும் இது போல மாணவர்களை கொண்டு நடத்துவதாக கூறனார்.
மாணவர்கள் தாங்கள் செய்ததை பார்வையாளர்களுக்கு அழகாக தமிழில் விளக்கம் தந்தனர். இங்கலீஸ் மீடியம் பள்ளி தானே ஏன் தமிழில் விளக்கம் தருகிறார்கள் என்று ஒரு ஆசிரியை இடம் கேட்டேன் பெற்றோர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக தமிழில் விளக்கம் தருவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டால் ஆங்கலத்திலும் விளக்கம் தருவார்கள் என்று கூறினார்.
நமது நிருபர்
நன்றி கல்லாறு.காம்
CONGRATULATIONS. VAAZHKA VALAMUDAN
பதிலளிநீக்கு