Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 அக்டோபர், 2013

மழைக்கால நோய்கள் கவனம்!

தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக் கூடும்.

பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.

நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.


சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.

மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள்  மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.

காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

சரியாகி விடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழைக் கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.
வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக