மார்க்க கல்வி
இன்றைய
முஸ்லிம்கள் மார்க்க கல்வியை கற்கும் விஷயத்தில் மிகுந்த கவனக்குறைவு
காட்டுகிறாரகள். அதனால் மிகுந்த அனாச்சாரங்கலும் மார்கத்தில்
இல்லாத பல மூடபழக்கங்கலும் நம்மிடையே வர காரணமாகின்றது.
இஸ்லாம் கல்வியை
தேடும் விஷயத்தில் அதிக அக்கரை எடுத்துகொள்ள சொல்கிறது. ஒரு வகையில்
இஸ்லாம் தான் உலகிற்கு அறிவியல் வளர்சியை பெற்று தந்தது என கூறலாம். நபி ஸல்லல்லாஹு
அலைஹி வ ஸல்லம் அவர்கள் நபியாக வருவதற்கு முன்பு வரை அறிவியலில் முக்கியமான
கொள்கையாக சொல்லப்பட்டது நீர்மியல் தத்துவம். ஒரு பொருளின்ன்
உன்மை அளவை அளக்க பயன்படுதப்பட்டது. நுபுவத்திர்கு
பிறகு தான் பல அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கு முக்கிய
காரணம் கல்வி தேடும் விஷயத்தில் இஸ்லாம் காட்டிய அதீத அக்கரை.
குறிப்பாக
மார்க்க கல்வி, ஒரு மனிதனை நெறி படுத்தவும்
பக்குவப்படுத்தவும் இந்த கல்வி அவசியம். இஸ்லாம்
இறையான்மையை மட்டும் சொல்லவில்லை. மாறாக
வாழ்வியலுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சொல்லும் ஒரு வாழ்வு களஞ்சியம். இஸ்லாதில்
அனைத்தும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் சட்டத்தை
கொடுத்து அமல் செய்யுங்கள் என்று சொல்லும் எழுத்து வடிவ சட்ட நூல் அல்ல. மாற்றமாக அனைத்து
சட்டங்களும் சூசகமாக சொல்லப்பட்டு, அதனை ஆராய்ந்து தெரிந்து
கொள்ளுங்கள் என சாதாரன ஒரு மனிதனையும் அறிவாலியாக்க முற்படுகிறது. சுருங்க
சொன்னால் இஸ்லாத்தில் உள்ளவன் ஒரு சட்டத்தை அறிந்தவனாக இருப்பதை விட சட்டத்தை ஆய்வு
செய்ய்யும் தகுதி உள்ள அறிவாளியாக இருப்பதை வரவேற்கிரது.
எனவே கல்வி
தேடும் விஷயத்தில் ஆர்வம் தேவை.
فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ
مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا
رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ﴾
[التوبة: 122]
குர்ஆனின் வசனம்
சொல்லும் கருத்து போருக்கு ஒரு கூட்டம் சென்றாலும் கல்வி கற்க ஒரு கூட்டம்
மதீனாவில் இருக்க வேண்டும். போருக்கு
சென்றவர்கள் போரிலிருந்த்து திரும்பிய உடன் கல்வியை கற்றுகொள்ளவெண்டும் என
கூருகிறது.
கல்வி கற்பது போர் செய்வதர்கு நிகரானது
قال صلى الله عليه وسلم : " من جاء مسجدي هــــــذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو
بمنزلة المجاهد في سبيل الله... " . رواه ابن ماجة
கல்வியை கற்று
பிறருக்கு சொல்வதில் சஹாபாக்களும் நல்லோர்கலும் பெரும் ஆர்வமும் பெருமையும்
கொண்டார்கள். கல்வி பணியே சிறந்த பணி என கருதினார்கள்
عبد الله بن الحارث يقول : أنا أول من سمع النبي صلى الله عليه
وسلم يقول
" لا يبول أحدكم مستقبل القبلة "، وأنا أول من حدَّث الناس بذلك
قال الحافظ ابن كثير عن الإمام
البخاري أمير المؤمنين في الحديث : ( وقد كان البخاري يستيقظ في الليلة الواحدة من نومه ، فيوقد السراج
ويكتب الفائدة تمر بخاطره ، ثم يطفئ ســـراجه ، ثم يقوم مرة أخرى وأخرى ، حتى كان
يتعدد منه ذلك قريباً من عشرين مرة
கல்வி கற்க
நெடுன் தூரம் பிரயாணம் செய்தார்கள். இதை சம்பவமாக
விளங்குவதை விட நம் வாழ்கையோடு கோஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள் புரியும். ஒரு பயான் நிகழ்சிக்கு
நம் மனதின் நினைபப்புகள் எப்படி உள்ளது. அதை மீறி அந்த
பயானுக்கு சென்றால் அதில் நம் கவனமும் ஆர்வமும் எந்த நிலை என்பதை நினைது பாருங்கள்
அனைத்திலும் நவீனத்தை எதிபார்க்கும் மக்கள் பயானிலும்
நவீனத்தையும் சுவாரிசதையும் நகைசுவையையும் எதிர்பார்கிறார்கள். சுருங்க
சொன்னால் பயான் இன்று எண்டெர்டைன்மெண்ட் ஆக மாறி விட்டது. பல தூரம் ஒரு
ஹதீசுக்காகவும் பிரயாணம் செய்தார்கள். பல
நாடுகளுக்கும் பிரயாணம் செய்தார்கள். அதற்காக அவர்கள்
அர்பனித்தது ஒன்று தான் அவர்களின் வாழ்க்கை
وكان عمرو بن سلمة رضي الله عنه ــ
وهو من صغار الصحابة ــ حريصاً على تلقي العلم فكان يتلقى الركبان ويستفتيهم
ويسألهم ويستقرئهم حتى فاقَ قومه كلهم وتأهَّل لإمامتهم ، يقول رضي الله عنه عن
نفسه : كنا على حاضر وكان
الركبان يمرون بنا راجعين من عند رسول الله صلى الله عليه وسلم فأدنو منهم فأسمع
حتى حفظت قرآناً وكان الناس ينتظرون بإسلامهم فتح مكة ، فلما فُتحت ، جعل الرجل
يأتيه فيقول : يا رسول الله أنا
وافد بني فلان وجئتك بإسلامهم ، فانطلق أبي بإسلام قومه فرجع إليهم وقال : قال رسول الله صلى الله عليه وسلم :" قدِّموا أكثركم قرآناً " ، قال فنظروا وإني لعلى حِواءٍ عظيم ،
والحِواء : بيوت مجتمعة من
الناس على ماء ، فما وجدوا فيهم أحداً أكثر قرآناً مني ، فقدموني وأنا غلام " . رواه أحمد . .
மதீனாவிலிருந்து டமாஸ்கசில் உள்ள அபூ தர்தா
ரலி யல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்க ஒரு மனிதர் வந்தார் இது மதீனாவிற்கும்
டமாஸ்கசுக்கும் உல்ல இடைவெளி 450 கீ.மீ. ஏ.சி பேருந்தாக
இருந்தாலும் சென்னையிலிருந்து மதுரை வரை நாம் செல்ல படும் அவஸ்தை சென்றவருக்கு
தெரியும் சில மனி நேரங்கள் பேருந்தில் இருக்க முடியவில்லை . ஒரு ஹதீசுக்காக 450 கீ. மீ. தாண்டியம்
பெரும் சிரமத்தோடு பிரயாணம் செய்தார்கள் எனில் ஒரு ஹதீசை அவர்கள் ஒன்று தானே என
அற்பமாக கருதவில்லை. அந்த ஒரு ஹதீசுக்காக தன் வாழ்கையும் இழக்க
தயாராக வந்தார் .
மரியாதைக்குரிய சகோதர மற்றும் சகோதரிகள்,
அல்லாஹ் எறும்பு , பறவை, மூலம்கூட தனது இஸ்லாமிய பணி நடத்த முடியும், ஒவ்வொரு வீட்டில் இருந்து,
தயவு செய்து குறைந்தது ஒரு குழந்தை ,
இரண்டு உலக கல்வி கற்பிக்கவேண்டும்
. நமக்கு
அல்லாஹ்வின் அச்சம் இல்லை.
பணத்தாசை கல்வியில் மதராசா, Niswan, ஜுமா பிரார்த்தனை, புறக்கணிக்கப்பட்டுள்ளது
, ஆண், பெண் இணை கல்விபற்றி கவலைப்படவில்லை . இன்றைக்கு
இஸ்லாமகல்வி அனாதை போல் இருக்கிறது, யாரும்
விரும்பவில்லை . MASHA அல்லாஹ் நம் குழந்தைகள் மருத்துவராக பொறியாளராக பாராட்டுகிறோம் . ஆனால் எத்தனை AALIM அல்லது AABITH??
= 0. புறக்கணி என்பதை
நீங்கள் தொடர்கிறீர்கள் எனில்அல்லாஹ்வின் முன்னால் பெரிய பாவம். எப்படி
அல்லாஹ்வின் முன் நாளை செல்வது? நம் முன்னோர்கள் குறைந்த கல்வி, ஆனால் அல்லாஹ் பயம், நல்ல செயல் பழக்கம்
இருக்கிறது . இப்போது நாம் இஸ்லாமியம் பற்றி கல்வி நிறைய அவர்களை போன்ற அல்லாஹ்வின் அச்சம், செயல் பாதி கூட இல்லை . இதில் அடுத்த தலைமுறைக்க
எவ்வளவு கிடைக்கும். உங்கள்
நம்பிக்கை, நற்செயல்களை உங்கள் தந்தையர்கள் விட மேலானது என்றால் இஸ்லாமியம் உங்கள் பாரம்பரியம் வளர்ந்து வருகின்றன , இல்லையெனில் நீங்கள் உங்கள்
சொந்த கையால் இஸ்லாமியம் அழித்து வருகின்றன அர்த்தம் .
நாம் என்ன செய்ய போகிறோம் ? ? ? ? ? ?
மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக