உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகளில் பெரம்பலூர் மாவட்டம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது தெரியவந்துள்ளது.
மானாவாரி விவசாயத்துக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பருவ நிலை மாற்ற பின்னடைவு விவசாயத்துக்கான தேசிய முன்முயற்சி' எனும் திட்டத்தின்கீழ் வெளியான வரைபடத்தில் இது தெரியவந்துள்ளது.
பருவ நிலை மாற்றத்தால், நிலத்தடி நீர் குறைதல், மழைக்காலங்கள் மாறுபடுதல் போன்ற ஏராளமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. இவை விவசாயத்தை பெருமளவில் பாதிக்கின்றன. ஆகவே, இந்த பருவ நிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவாறு என்ன வகையான பயிர்களை விளைவித்தால் நன்மை பயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டு அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி அவற்றை இந்த முன் முயற்சியின் மூலம் செயல்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.
கடந்த 30 ஆண்டுகளில் பருவ நிலை மாற்றத்தின் பல்வேறு பின் விளைவுகளான மழைக்காலங்கள் மாறுபடுதல், நிலத்தடி நீர்வளம் குறைதல் போன்றவை நாடு முழுக்க என்ன வகையான மாற்றங்களை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைக் கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து 'பருவ நிலை மாற்ற பாதிப்பு வரைபடம்' ஒன்றை இந்த நிறுவனம் திங்கள்கிழமை (30-ம் தேதி) வெளியிடுகிறது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் வெங்க டேஸ்வரலு ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
ஒரு மாவட்டத்தின் வெப்ப அளவு மற்றும் மழை வரத்து, வெள்ளம், வறட்சி ஏற்படக்கூடிய தன்மை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினோம்.
அதில் பருவ நிலை மாற்றத்தால் தேசிய அளவில் அதிக பாதிப்புக்கு உள்ளாகிற மாவட்டமாக ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம், தேசிய அளவில் 28-வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளது. அரியலூர் மற்றும் சேலம் மாவட்டங்கள் முறையே இரண்டாம் (தேசிய அளவில் 39), மூன்றாம் (தேசிய அளவில் 70) இடங்களில் உள்ளன என்றார்.
மேலும், ‘பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பயிர் செய்து விவசாயம் செய்ய வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் இந்த வரைபடம் பயன்படும்’ என்றும் அவர் கூறினார்.
நன்றி திஇந்து தமிழ்
தண்ணீரையும் மனித உடலையும் தனித்தன்யாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது எவ்வளவு முக்கியமானது என்றால் உடலில் தண்ணீரின் பங்கு மூன்றில் இரண்டு ஆகும். எனவே தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம். மனித உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதேப்போல இந்த மண்ணிற்கு தண்ணீர் உயிராக விளங்குகிறது. மண் உயிரோடு இருக்கும். அனைத்து ஜீவராசிகலும் உயிர்வாழ அடிப்படை காரணமாக தண்ணீர் விளங்குகிறது. இந்த உலகின் நவீன விஞ்ஞான வளர்ச்சியில் தண்ணீரை சுயமாக ஒரு சொட்டு என்ற அளவில் கூட உருவாக்கவோ தயாரிக்கவோ முடியாது.
தண்ணீரை குறித்து 1450 வருடங்களுக்கு முன்பாக இறைவன் இவ்வாறு கூறுகிறான். தண்ணீரை கொண்டு வருவது மனிதன் இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.
மனிதனால் உற்பத்தி செய்யவோ, தயாரிக்கவோ முடியாத தண்ணீர் குறித்து மக்கள் இன்றளவும் ஏனோதானோ என இருக்கிறார்கள்.
தண்ணீரை தனி மனிதனோ அல்லது தேசமோ உரிமை கொண்டாட முடியாது. காரணம் தண்ணீரை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் தண்ணீர் குறித்த அச்சத்தை சமீபகால சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தண்ணீரை பற்றி அல்லாஹ் தன் திருமறையில்...
பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும் போது அது (பயிர்) செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 41:39
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.
திருக்குர்ஆன் 39:21
'வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
திருக்குர்ஆன் 32:27
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக