13 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்த 'முஷாவரத்' அமைப்பின் இரு பிரிவுகள்!
உணர்வு பூர்வமான செய்தியாளர் சந்திப்பு!!
தமிழகத்திலும் பிரிந்தவர் ஒன்று படுவரா?
1964 ல் துவக்கப்பட்ட 'ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ் முஷாவரத்' அமைப்பில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'இரு பிரிவுகளாக' செயல்பட்டு வந்தனர்.
செய்யத் ஷஹாபுத்தீன் தலைமையில் ஒரு அணியினரும், மவுலானா முஹம்மத் சாலிம் காசிமி தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வந்தனர்.
இந்த இரு அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கை நீக்குவதற்காக நீண்ட காலமாக பல தரப்பினரும் முயற்சித்து வந்தனர்.
எனினும், டெல்லியில் நேற்று (27/10/13) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிப்பட்டது.
மிகவும் உணர்வு போர்வமாக இருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பலரும், கடந்த காலங்களில் பிளவுக்கு காரணமாகிவிட்ட தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம் என உறுதியளித்தனர்.
இவ்வினைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் தற்போது, 'முஷாவரத்'தின் ஒரு குழுவிற்கு தலைமைப் பொறுப்பை வகித்து வந்தவருமான 'டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்' பேசுகையில்:
இந்த ஒற்றுமை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக