Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 22 அக்டோபர், 2013

மாவட்ட அளவில் நமதூர் மாணவிகள் சாதனை....

பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அண்ணாவின் 105வது பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக அண்ணாவின் 105வது பிறந்த நாள் விழாவையொட்டி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பாலக்கரையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மாரிக்கண்ணன் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். இளை ஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், காட்டுராசா, அன்பழகன், ரசூல்அஹமது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சுப்ரமணியம், பிரபாகரன், சிவசங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சுபாசந்திரசேகர், தலைமை பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரைசாமி, அரியலூர் சிவசங்கர் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ராஜேந்திரன், ராஜ்குமார், தங்க ராசு, மாவட்டதுணைசெயலாளர் வெங்கடாசலம், பொரு ளாளர் ஜெகதீசன், நகரச்செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பேச்சுப் போட்டியில் முதல் 3இடங்களை பெற்ற பாடாலூர் ராகவி, அரணாரை ரம்யாதேவி, அன்னமங்கலம் சுதர்ஷினி, கவிதைப் போட்டியில் முதல் 3இடங்களை பெற்ற பாடாலூர் யாஷினி, வேப்பந்தட்டை வான்மதி, லெப்பைகுடிகாடு ரெனாஷ் பானு, கட்டுரைப் போட்டி யில் முதல் 3இடங்களை பெற்ற வி.களத்தூர் நஜ்முனிஷா, லெப்பைக்குடிகாடு பெமினா, வி.களத்தூர் சபின்தாஜ் ஆகியோருக்கு பரிசுத் தொகை யுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆணுக்குபெண் சரிநிகர் சமானமெனகொள்வோம் என்ற பாரதி வார்த்தைகளை நமதூர் பெண்களும் மெய்ப்படுவத்தி வருவது ஆரோக்கியத்தை தருகிறது. அண்ணா பிறந்தாளையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று நமதூருக்கு பெருமை சேர்த்த நமது சகோதரிக்கு நமதூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 கருத்து:

  1. ஆணுக்குபெண் சரிநிகர் சமானமெனகொள்வோம் என்ற பாரதி வார்த்தைகளை நமதூர் பெண்களும் மெய்ப்படுவத்தி வருவது ஆரோக்கியத்தை தருகிறது

    பதிலளிநீக்கு