Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ரேசன் கார்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் -மமக

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு நகரம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது ஆர்ப்பாட்டதிற்கு பிறகு பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் S.M.ஜெய்னுல்லாப்தீன் கூறியதாவது,

லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி  சார்பாக இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நாங்கள் அரசிற்கு ஒருமாத கால அவகாசம் தருகிறோம் அதற்குள் மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்களை அறிவிப்போம் அதன் ஒரு பகுதியாக அரசு கெஜட்டில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை அத்திப்பட்டியாக்கும் நோக்கோடு பெண்ணகோணம் வடக்கு என்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதே போன்றுதான் பல பெயர்களை வைத்து இவர்களே அடையாளச் சான்றுகளை வழங்கி கடைசியாக தீவிரவாதி என்ற முத்திரையை குத்துகிறார்கள் ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் லப்பைக்குடிக்காடு என்று பெயர் மாற்ற வேண்டும்.இல்லாவிட்டால் மக்களை திரட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு  ரேசன் கார்டு நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

1 கருத்து:

  1. இது மிகவும் வரவேற்க தக்கது , ஆனால் நாம் முதலில் மக்களின் உரிமைக்காக ( ஆற்றோர வீடுகளுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக , அணைத்து வீடுகளையும் இடிப்போம் என ஆணை பிறப்பித்த - சம்பந்தப்பட்ட அனைத்து துறை மற்றும் ஆதிகாரிகளுக்கும் : வாழ்வுரிமை & வாழ்வாதாரம் பறிப்பு சம்பந்தமாக ) போராட வேண்டும் தீர்வு கிடைக்கும் வரை , அது அரசியல் நோக்கிற்காக மட்டுமல்லாது , மக்களின் நலனை கருதியே இறுக்க வேண்டும் ------ அனைவரும் ஒன்று படுவோம் , அநீதி சாகும் வரை போராடுவூம் , வெற்றி நிச்சயம் !

    பதிலளிநீக்கு