நமதூர் மக்களின் வாக்கும் ! ஜமாத்தின் நிலைமையும் ?
கடந்த மாதம் நாம் நம் தளத்திள் மக்களின் கருத்தை கேட்டு இருந்தோம். மேற்கு ஜமாத்திற்கு சொந்தமான புதிய கடை வாடகை விடும் சம்மந்தமாக எப்படி ,யார் யாருக்கு வாடகை விட வேண்டும் என நமதூர் மக்களிடம் ஓட்டு கேட்டு இருந்தோம். இது போன்ற செய்திற்கு நமதூர் மக்களிடம் நல்ல வரவேற்பு காண முடிந்தது. ஒரு சிலர் நமக்கு மின்னஞ்சல் மூலமாக கருத்து களையும் பகிர்ந்து கொண்டனர். வழக்கம் போல் ஊர் மேல் அக்கரை இல்லாதவர்களிடம்
இருந்து மிரட்டல்கள் வந்தன.
நமதூர் மக்கள் அளித்த தீர்பை கீழே வெளியிடுகிறோம். ஊர் முன்னேற்றத்திற்காக வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் சுபஹானவுத்தாலா அருள்புரிவானாக.
18 ஆம் நூற்றாண்டில் யார் கைகளில் கடற்படை இருந்ததோ அவர்களுக்குதான் உலகம் சொந்தமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் விமானப்படைகளை வைத்திருந்த நாடுகள் உலகத் தீர்மானித்தன. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ அவருக்கு உலக நாடுகள் சொந்தமாகிவிடும் என மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
இது போல இன்று நிர்வாகத்தை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்து கொண்டு இவர்கள் சொய்யும் ஒரு தலை மட்சமான முடிவுகளால் துபாயில் இருந்து ஊரில் புதியதாக தொழில் தொடங்குவதற்கு வந்தால் ஜமாத்தின் கடைகள் கிடைப்பது இல்லை. இதை தான் மக்கள் அளித்த தீர்ப்பு. இனியாவது நிர்வாகம் மக்களின் கருத்துற்கு செவி சாப்பார்களா ? இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது
கொடியவர்களில் மிருகத்தனங்கள் அல்ல
எங்களுக்கு அதிச்சி வருவது,
நல்லவர்களின் மௌனமோ?
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக