அல்தாபி சொன்னதைப் போல் இவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா ?
10% இட ஒதுக்கீடு தந்தால் பாஜகவை ஆதரிக்கத் தயார் என தைரியமாக ஒரு முஸ்லிம் அமைப்பே சொல்லும் போது
காங்கிரசை வீழ்த்த தமிழருவி மணியன் ஆதரிப்பதாக சொல்வதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும் ?
முஸ்லிம் அமைப்பு போல பாஜக உடன் கூட்டணி என வாய் திறந்து சொல்லாத வைகோ வை ஏன் வசை பாட வேண்டும் ?
இன்னும் யாருடனுன் கூட்டணி என சொல்லாத நிலையில் விஜயகாந்தை ஏன் திட்ட வேண்டும் ?
மகனுக்கு மந்திரி பதவி கிடைத்தால் ராமதாஸ் ஆதரிப்பார் என ஏன் திட்ட வேண்டும் ?
மோடி ஜெயலலிதா விட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்ததற்கு நாம் ஏன் எதிர்க்க வேண்டும் !
ஜெயலிதா பிரதமர் பதவியை எனக்கு தந்தால் பாஜக வை ஆதரிக்கத் தயார் என சொன்னால் ஏற்றுக் கொள்வோமா?
முத்தார் அப்பாஸ் நக்வியை பிரதமர் ஆக்கினால் பாஜகவை ஆதரிக்கத் தயார் என முலாயம் சிங் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாமா ?
புதிய பொருளாதாரக் கொள்கையை கைவிட்டால் பாஜகவை ஆதரிக்கத் தயார் என கம்யுனிஸ்டுகள் சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?
சொல்லி விட்டு இது நடக்காது அதனால் தான் சொன்னோம் என்று இவர்கள் எல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா?
முஸ்லிம்கள் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் பல வருடமாக ஏமாற்றுவது போல் திமுக அதிமுக ஏமாற்றுவது போல் சும்மா சொல்லி வைப்போம் என முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்கு முக்காடும் தொப்பியும் மொத்தமாக வாங்கும் அவர்கள் நினைத்தால் ஒரு முஸ்லிம் அமைப்பின் வாக்குறுதி என்னாவது?
மேலும் இந்த அமைப்புகள் எல்லாம் ஒரு முஸ்லிம் அமைப்பே
தங்கள் நலனுக்காக பாஜகவை ஆதரிக்க துணிந்து விட்ட பின் நாம் ஏன் எதிர்க்க வேண்டும் ? நம்முடைய நலனை நாம் பார்ப்போம் என சிந்தித்தால் என்னாவது?
வார்த்தைகளை எப்போதும் கவனமாக கையாள வேண்டும் இல்லை எனில் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் !
மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது ரபி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக