Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 19 அக்டோபர், 2013

நமதூர் அணி முதல் பரிசு...

வி.களத்தூரில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு வாலிபால் போட்டி நடைபெற்றது.இப்போட்டியை திப்பு சுல்தான் வாரியர்ஸ் அணி நடத்தியது. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ 3,001ம் இரண்டாம் பரிசாக ரூ 2,001ம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ 1,001ம் அறிவிக்கப்பட்டிருந்து.அதன் படி போட்டி நேற்று  மாலை 4.00 மணி அளவில் துவங்கியது.


முதல் பரிசு பெற்ற லப்பைக்குடிகாடு எம்.ஆர்.எப் அணியினருக்கு  3,001 ரூபாயை புஸ்ரா நல அறக்கட்டளையின்  வி.களத்தூர் கிளை தலைவர்  மு. அன்ஷர் அலி அவர்கள் வழங்கினார்.

இரண்டாம் பரிசு பெற்ற வி.களத்தூரைச் சேரந்த திப்பு சுல்தான் வாரியர்ஸ் அணியினருக்கு 2,001 ரூபாயை பெரம்பலூர் எஸ்.எஸ் பர்ணிச்சர்ஸ் மற்றும் சுஹித் மெடிக்கல்ஸ் நிருவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது 

மூண்றாம் பரிசு பெற்ற 7 ஸ்டார் அணிக்கு  1,001 ரூபாயை அல் ஜாஸிம் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் மு.ஜாஹிர் ஹுசேன் அவர்கள் வழங்கினார்.

நமது இணையத்தளத்தின்மூலமாகவும், நமதூர் மக்கள் சார்பாகவும் நமதூர் இளைங்கர்கலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி விகளத்தூர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக