சபியா நீ மீழாத் துகிலில் ஆழ்ந்துவிட்டு…!
எங்களையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டாயே…!
யாரும் எதிர்பாராத அந்த துர்சம்பவம் நிகழக்கூடாது என்றுதான் நாமும் ஆசைப்பட்டோம் ஆனால் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பதுபோல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. என்னைப்போன்ற எத்தனையோ மாணவர்களை முதல் மதிப்பெண் பெறவைத்து அழகுபார்த்த ரஹ்மான் சார் அவர்களின் கனவு பொய்த்துப்போனதேன்? மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சிபெறவேண்டிய நீ இப்படி அகால மரணமடைந்து விட்டாயே? காலம் கனிந்துவரும் வேலையில் காலன் உன்னை கவர்ந்து சென்றதேனோ? என்று புறியாமல் புலம்புகிறோம்.
கிருத்துவ மதத்திற்கு சொந்தமான பள்ளி பேருந்து, அதை ஓட்டியது இந்து மதத்தை சேர்ந்தவர், அதில் பலியாகிப்போனதோ முஸ்லிம் மாணவி. சபியா உன் மரணம்கூட சமூக நல்லிணக்கத்தை விதைத்தே சென்றுள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு உன் மரணம் வித்திட்டதால் நீயும்கூட தியாகிதான் நீ பெற்றதும் வீரமரணம்தான்.
சாவுக்கு சாதிமத பேதம் கிடையாது என்று உன் மரணத்தின்மூலம் சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறாய். தெருவில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் அகற்றுவது இஸ்லாத்தின் ஒரு பகுதி என்று இஸ்லாம் சொல்கிறது, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று இந்து மதம் சொல்கிறது. மதம் மனிதனை வாழவைக்க சொல்வதை மறந்து மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சன்டைபோட்டுக்கொண்டு உரிமைக்காக போராடாமல் உயிர்பலியை சந்தித்துவிட்டோம்.
நகரத்தின் சாலைகள் எல்லாம் இரவோடு இரவாக போடும் அளவிற்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு செயல்படுகிறது. ஆனால் கிராமம் மட்டுமே என்றென்றும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இரண்டு மாதம் மேலாகியும் போடாமல் இருந்த சாலையால் ஒரு அப்பாவி மாணவியின் உயிர் பறிபோனது.
நமக்கு வந்தால்தான் அது இரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் அது இரத்தமில்லை என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம். சபியா உன் மரணத்திற்குபிறகுகூட இந்த சமுதாயம் சாதி மதம் பாராமல் ஒன்றுபட்டு ஜனநாயக வழியில் போராடி மற்ற உயிர்பலியையாவது தடுக்காவிட்டால்…? இந்த உணர்ச்சியற்ற ஊரில் நானும் பிறந்ததற்காக வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்.
கடல் கடந்து வாழும் எங்களால் உனக்கு செய்ய முடிந்ததெல்லாம் கண்ணீருடன்கூடிய பிரார்த்தனை மட்டுமே.
யா அல்லாஹ் மரணித்துவிட்ட சகோதரி சபியா பீயின் பாவங்களை மண்ணித்தருள்வாயாக… இந்த சகோதரியின் மண்ணரையை ஒளியுள்ளதாக ஆக்கி வைப்பாயாக… சகோதரியுடைய கப்ரின் வேதனையை இலகுவாக்குவாயாக, யா அல்லாஹ் நீ நாடினால் கப்ரின் வேதனையையே இல்லாமல் ஆக்க முடியும் ஆகையால் சபியாவுடைய கப்ரில் வேதனையில்லாமல் ஆக்குவாயாக… இந்த சகோதரிக்கு ஜன்னத்துல் நயீம் என்னும் சொர்க்கத்தில் இடத்தை தந்தருள்வாயாக… இந்த சகோரியின் பிரிவால் வாடும் பெற்றோர்களுக்கும் உறவிணர்களுக்கும் மணோதைரியத்தையும் ஆறுதலையும் தந்தருள்வாயாக…
இறைவா எங்களது பிரார்த்தனையை அழகான முறையில் ஏற்றுக்கொள்வாயாக…
ஆமீன்…ஆமீன்…யாரப்பல் ஆலமீன்.
.
துஆவுடன்…
சவுக்கத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக