Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 அக்டோபர், 2013

அனைவரது வரவேற்பையும் பெற்ற IFFன் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவை!

சவூதி அரேபியா முழுவதும் நல்ல பல சமூகச் சேவைகளைச் செய்து வருகிறது இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (IFF). இதன் சேவைகளில் மிக முக்கியமானதும், அனைவரது வரவேற்பையும் பெற்றதுதான் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவை.


கடந்த 2005ம் ஆண்டு முதல் தன்னலமில்லாமல் இந்தப் புனித சேவையை IFF செய்து வருகிறது. சவூதி அரசின் ஹஜ் அமைச்சகம், WAMY என்ற உலக முஸ்லிம் இளைஞர் அமைப்பு (World Assembly of Muslim Youth), இந்தியன் ஹஜ் மிஷன் போன்றவை IFFன் இந்தச் சேவையை வரவேற்றுள்ளன, அதற்காக
அனைத்து சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு கடுமையாகப் பாடுபடும் IFFன் தன்னார்வத் தொண்டர்களையும் மனமாற ஏற்று, பாராட்டியுள்ளன.

IFFன் இன்னொரு மிக முக்கிய பணி மினாவின் வரைபடத்தை உருவாக்கி ஹாஜிகளுக்குக் கொடுப்பது. இது ஹாஜிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்தியாவின் பல மொழிகளைப் பேசுகிற, பல்வேறு மாநிலத்தவர்கள் இதில் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றுவதும், அவர்களுக்கு அளிக்கப்படுகிற அருமையான பயிற்சி முறைகளும் இந்திய ஹாஜிகளுக்கு மட்டுமல்ல, உலக ஹாஜிகளுக்கே சேவை புரிவதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.  பல மொழிகள் பேசுகிறவர்கள் இதில் இருப்பதால் மொழிப் பிரச்னை அங்கே பெரிதாகத் தோன்றுவதில்லை.

“IFF ரியாத் கிளையிலிருந்து 200 தன்னார்வத் தொண்டர்களும், ஜெத்தா ரீஜியன் உட்பட மொத்தம் 1200 தொண்டர்கள் மினாவில் ஹாஜிகளுக்கு உதவிகள் புரிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‘” என்று IFFன் ரியாத் பகுதி ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சார்ந்த ஸித்தீக் கூறினார்.

முதல் ஹாஜி விமான நிலையத்தில் இறங்கியது முதல் கடைசி ஹாஜி விமானத்தில் ஏறும் வரை IFFன் தன்னார்வத் தொண்டர்கள் விரிவான பல சேவைகளை அற்புதமாகச் செய்கின்றனர். காணாமற் போனவர்களை அவர்களின் உறவினர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது, வழி தவறிப் போனவர்களை அவர்களின் முகாமுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது, வயதான முதியவர்களைத் தூக்கிச் செல்வது, அவசர மருத்துவ உதவிகளைச் செய்து உயிர் காப்பத என்று இவர்களின் சேவைகளில் பலன் பெற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுவது கேட்பவர்களுக்குக் கண்ணீரை வரவழைத்திடும்.

மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக