வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை.
இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது முன்வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 176 இந்திய உயர் தூதரகங்களின் மூலம் ‘எலக்ட்ரானிக் இண்டியன் போஸ்டல்’ எனப்படும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக தகவலுக்கான கட்டணத்தை செலுத்தி மனுதாரர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு இனி விண்ணப்பிக்கலாம்.
இதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.epostoffice.gov.in அல்லது www.indiapost.gov.inஎன்ற இணைய தளங்களில் மனுதாரர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதுமானது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக