Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 அக்டோபர், 2013

துபாயில் தியாகத் திருநாள் ......

அனவைருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

 
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (15.10.2013) துபையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

துபை தேராவிலுள்ள ஈத்காஹ் திடலில் நமது அமீரக நிருபரும் நமதூர் மக்களும்  பலர் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டனர். தக்பீர் முழக்கங்கள் முடிந்தவுடன் சரியாக காலை 6.40 மணிக்கு தொழுகை ஆரம்பித்தது. அதன்பிறகு குத்பாப் பேருரை நிகழ்த்தப்பட்டது.


குத்பாப் பேருரை முடிந்தவுடன் மக்கள் ஒரவருக்கொருவர் ஆலிங்கனம் (தச்பு) செய்து தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

வழக்கமாக நமதூர் மக்கள் சந்தித்து, கட்டிப் பிடித்து, பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவு கூரும் ஈதுல் அழ்ஹா என்ற தியாகத் திருநாள் தினம் இது.

அரபுலகம் எங்கும் இன்று தியாகத் திருநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. துபையைப் போன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன், ராசல்கைமா போன்ற இடங்களிலும் பெருநாள் தொழுகைகள் ஈத்காஹ் திடல்களில் சிறப்பாக நடந்தேறியது.

துபையில் காலை 6:00 மணி முதலே மக்கள் தேராவிலுள்ள ஈத்காஹ் திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். பல்வேறு நாட்டைச் சார்ந்த, பல நிறத்தவரைக் கொண்ட, பல மொழிகளைப் பேசுகிற மக்களை அங்கே பார்க்கும்பொழுது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமும், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வும் ஏற்பட்டது.

அமீரகத்தில் இருந்து
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக