Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 அக்டோபர், 2013

நமது நிருபரை கண் களங்கவைத்த மீன்.

நமது நிருபரை கண் களங்கவைத்த மீன்.


நமதூரில் உள்ள மேற்கு பள்ளிவாசலுக்கு நமது நிருபர் சென்ற வேலையில் எதார்த்தமாக ஹவ்ஜியில் உள்ள மீன்களை சந்திக்க நேரிட்டது. அப்பொழுது இயற்கை எழிலோடு விளையாடி கொண்டிருந்த மீன்கள் நமது நிருபரை சில கேள்விகளை கேட்டு திணரடித்தது.

கற்பணை மட்டுமே யார் மணதையும் புண்படுத்த அல்ல...

மீன் . பல பேர் இங்கு வராங்க போராங்க நீங்க மட்டும் என்ன குரு குரு பார்த்துட்டு போட்டா எடுக்குறீங்க!


ந.நி . நீங்கள்ளாம் சந்தோசமா இருக்குறத மக்களுக்கு காட்டலாம்னு 

மீன் . நீ ஏன் எங்கள காட்ற அவிங்கதான் வாரத்துக்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை வந்து பாத்துட்டு போறாங்களே !

ந.நி .  இல்ல கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூரில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் பொழுது உங்களுடைய இனம் கிழக்கு பள்ளிவாசல் ஹவ்ஜியில் பலியானதை நாங்கள் தான் பத்திரிக்கை செய்தியில் போட்டு உங்களுடைய தியாகத்ததை வைத்துதான் மக்கள் விழிப்புணர்வு அடைந்தார்கள். அதனால தான் இப்பொழுது சந்தோசமா இருக்கும் பொழுது போட்டா எடுக்கலாம்னு....

மீன் . அப்படினா நீங்கதான் நமதூர் இணைய தளத்தின் நிருபரா? 

ந.நி . உஸ்ஸ்... (மனசுக்குள்ள ...ஒங்கள்ட போய் மாட்டிகிட்டேன !) ஆமா

மீன் . அன்னைக்கு நீங்க இந்த செய்தியை வெளியிட்டதனால மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு அடஞ்சாங்க... அதனால உங்கள் மேல எனக்கு அவ்வளவா கோபம் இல்ல .. 

ஆமா ஊர்லதான் அத்தன பேர் இருக்காங்கள உங்களுக்கு மட்டும் என்ன தலையெழுத்தா? நீங்களும் பத்தோட பதிநொன்னா இருந்துட்டு போக வேண்டியது தானே எதுக்கு கஸ்டப்படுறீங்க!

ந.நி . நாங்களும் 20 வருசமா பாத்துட்டு இருக்கோம் இந்த 5 வருசத்துல இந்த மாடு பால் கரக்கும் அந்த மாடு பால் கரக்கும்னு. மாடு பால் கரந்த பாடில்லை என்னடா பால் மாடு கரக்க மாட்டேங்குதேனு போய் பாத்தா கடசியில காள மாடுன்னு இப்பதான் தெரியவருது. இந்த விசயத்தில் மக்கள்தான் ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.

மீன் . குழப்பதிங்கடா விடுங்க.. தொரியாத கேள்வி கேட்டேன்...
என்டா உங்கள்ள சில பேருக்கு அறிவே இருக்காதா?  இப்ப நா சொல்ற என்ன தூக்கிட்டு போய் கிழக்கு பள்ளிவாசல் ஹவ்ஜியில போடு நாங்க ஒத்துமையா இருப்போம். கிழக்கேந்து எடுத்து வந்து இங்க போடு அப்பவும் நாங்க ஒத்துமையாதான் இருப்போம். 

நீங்களும் தான் ஊர்ல இருக்கீங்க ! ஒத்துமையா இருந்தா எவ்வளவோ சாதிச்சு இருக்கலாம் பாதால சாக்கடை திட்டம் வந்து இருந்ததுனா அன்னைக்கு என் இனமே அழிந்திருக்காதுடா முட்டால்களா ! 
குர்ஆன் ஹதீசை இமாம்கள் சொல்லி கொடுத்தார்களா இல்லையா?

ந.நி . (மவுனமாக நின்ரார்....)

மீன் . சொல்ரா சொல்லி கொடுத்தார்களா இல்லையா?

ந.நி . சொல்லி கொடுத்தார்கள்...

மீன் . வேகமாதான் சொல்லுரது... யார் பக்கத்துள இருக்கா நாமட்டும் தான இருக்கேன். 


தாதா அத்தா மீன். ஏன்டா அந்த தம்பிட்ட போய் கோபத்தை காட்டிட்டு இருக்க தம்பி சமுதாய சிந்தனையோடு வாழ ஆசைபடுறாப்ள. தம்பியை போல பல பேர் சமுதாய நலம் வரும்பிகள் ஊர் மேம்பாட்டிர்காக வாழ ஆசைபடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெளிவராமல் இருப்பதுதான் சோகம்.

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் வெளிவருவார்கள்.

கலங்கிய கண்களோடு நமது நிருபரை தாதா அத்தா மீன் வழி அனுப்பி வைத்தது.......

நமது நிருபர்.

1 கருத்து:

  1. சமுதாய சித்தனையா அப்படின்னா ? அது சரி ஏம்பா நான் நல்ல இருந்தா போதாதா நீங்க வேற சமுதாயம் அது இதுன்னு போங்கையா இந்த மீனுக்காக நமதூர் மக்கள் யார் பதிவு செய்கிறார்கள் என்று பார்போம் .நான் தயராக உள்ளேன் நமதூரில் ஒரு ஜமாத் வர வேண்ண்டும் என்று .நதூர் சகோதர்கள் வர தயாராக இருக்கார்களா? ஏன் இதை நான் சொல்லுகிறேன் என்றால் நாம் அனைவரும் முஸ்லீம்கள் .

    பதிலளிநீக்கு