இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
2014-17 காலக்கட்டத்தில் இத்திட்டம் மூலம் 9.7 லட்சம் மாணவிகள் பலன் அடைவர். அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த 50 ஆயிரம் மாணவிகளுக்கு முதல் கட்டமாக இத்திட்டம் மூலம் பலன் கிடைக்கும்.