காஸா : பலஸ்தீனர்களின்
சுயாட்சி பகுதியான காசாவின் மீது இஸ்ரேல் கடந்த இரு நாட்களாக நடத்தியஅதி தீவிர
வான் வழி தாக்குதலால் மக்கள் வெளியே வராமல் காஸா வெறிச்சோடி கிடக்கிறது.
இரு தினங்களுக்கு முந்தைய
இரவில் பலஸ்தீனம் காசா பகுதியில் சுயாட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவான
இஸ்ஸத்தீன் கஸ்ஸாமின் தலைவர் அகமது ஜாப்ரி பயணம் செய்த வாகனத்தின் மீது நடத்திய
ராக்கெட் தாக்குதலில் அஹம்து ஜாப்ரி, அவரது மகன், பிபிசி ஊடகவியலாளரின் மகன் 11 மாத பாலகன் உமர் (படத்தில்
உள்ள குழந்தை) உள்ளிட்ட 10 நபர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேலின் மீது ஹமாஸ்
ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
இரண்டு நாட்களாக ஹமாஸ்
அரசின் பாராளுமன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களின் மீதும் இஸ்ரேல் நடத்திய
வான் வழி தாக்குதலில் 20 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பான்மையினர் அப்பாவிகள் என்றும்
கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர்.
பலஸ்தீன மக்களை அகதிகளாக்கி
உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அழிப்பதையே தம் இலக்காக கொண்டு செயல்பட்ட ஹமாஸ் சில
வருடங்களாக காஸாவை அமைதியாக ஆட்சி செய்து கொண்டு வரும் நிலையில் இஸ்ரேல்
இத்தாக்குதலை தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தாக்குதலில்
கொல்லப்பட்ட 11 மாத பாலகன் உமரி தந்தை மஷ்ராவி நிருபர்களிடம் " தீவிரவாத இலக்குகளை குறி
வைத்து சுடுவதாக இஸ்ரேல் கூறுகிறது. என் 11 மாத குழந்தை செய்த பாவம் என்ன? அதை இஸ்ரேல் சொல்ல
முடியுமா" என்று கதறி அழுதார்.
நன்றி இந்நேரம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக