Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 நவம்பர், 2012

வெட்கப்படாத ஒரு தேசம்!


தடுமாறும் நீதி: கசாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒருபெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட போது நாம் இதுபோல் எதுவும் நடத்தவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பேஸ்புக்கில் இவரது தோழி ரேணுகா ‘லைக்’ கொடுத்தார். 

இதை காரணமாக வைத்து மும்பை போலீஸ் இந்த இரண்டு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனை பயங்கரவாதிகள் சூறையாடி இருக்கின்றனர். மும்பை போலீசாரை கண்டித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டே இது பத்திரிகை சுதந்திரத்தின் குரலை நசுக்குவதாகும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கயவர்களை அலங்கரிக்கும் தேசிய கொடி: மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தின் மூலம் வளர்க்கப்பட்ட மதவாத சிவசேனை இயக்கத்தின் தலைவர் பால்தாக்கரேவின் இறுதி சடங்கை அரசு மரியாதையோடு, தேசிய கொடி போர்த்தி நடத்தியது தேசிய அவமானம்.

தகுதியற்ற இரங்கல் அறிவிப்புகள்: அவரது இறப்பிற்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், திராவிட கழகத்தின் கீ. வீரமணி உட்பட சகலமானவர்களும் ஏதோ தேசத்தின் ஒரு முக்கிய தலைவர், தியாகி இறந்து விட்டத்தை போல் இரங்கள் தெரிவித்திருப்பது அதைவிட கேவலம். நாட்டில் எத்தனையோ நல்லவர்கள், மக்கள் சேவை செய்தவர்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் அரசு மரியாதையும், தேசிய கொடி போத்தி இறுதி ஊர்வலமும் நடத்தப்பட்டது இல்லை.

சிறந்த வெட்கம்: மும்பை கலவரத்தை முன்னின்று நடத்தியது பால்தாக்ரே என்று சொன்ன ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், சிவசேனா மற்றும் தாக்கரேவின் பங்களிப்பை ஆதாரத்தோடு நிரூபித்தது. இப்படிபட்ட ஒரு கிரிமினலுக்கு வெட்கம் இல்லாமல் தேசியக்கொடி போர்த்தி அரசுமரியாதை. ஆனால் கசாப் சடலத்தை வாங்கவே பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவன் என்பதால் அந்த சடலத்தை வாங்க ஒருநாடு வெட்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குற்றவாளிகளுக்கு அரசு மரியாதை. 


மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!!

விடை தெரியாத கேள்விகள்.............???

இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் கசாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.....பாகிஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படை தீவிரவாதிகள் மும்பையிலுள்ள தாஜ் ஓட்டலை தாக்கினர் அந்த தாக்குதலில் 160 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்,அந்த தாக்குதலின் போது கூலிப்படை தீவிரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களும் கொல்லப்பட்டார்கள்,

அந்த எதிர்த்தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், சிலர் தப்பியோடினர்..... அந்த தீவிரவாதிகளில் சிக்கிய ஒருவன் தான் இந்த அஜ்மல் கசாப் அந்த அஜ்மல் கசாபிடம் 3 ஆண்டுகளாக விசாரணை செய்து இப்பொழுது தூக்கிலிடப்பட்டுள்ளது இந்நிலையில் இது பற்றிய திடுக்கிடும் சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது...... 

அவைகளில் அது பற்றி விடை தெரியாத கேள்விகள் :- 

1) 3 ஆண்டுகளாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதே.... அவனையும், அவனது கூலிப்படை தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தது யார்..........? 

2) கடல் வழியாக வந்தார்கள் என்று கூறும் காவல்துறை கடல் பகுதிகளை பாதுகாக்க இந்தியாவில் கடற்படையே இல்லையா.......? 

3) காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டார்கள் என்று கூறும் போது இன்றைய தினம் கருத்து தெரிவித்த சோ அவர்கள் இது ஒன்றும் புதிய செய்தி இல்லையே என கூறியுள்ளார், 

புதிய செய்தி இல்லையென்றால் தீவிரவாதி அஜ்மல் கசாபை இன்றைய தினம் தூக்கிலிடப்போகிறார்கள் என்ற இரகசியம் "சோ" வுக்கு எப்படி தெரிந்தது..........?

4) 3 ஆண்டுகளாக 30 கோடி ரூபாய் செலவு செய்து விசாரணை செய்து வந்த அஜ்மல் கசாபை அதே மும்பை நகரத்தின் முக்கிய புள்ளியான பால்தாக்கரே மரணித்து 3 நாட்களில் தூக்கிலிடும் மர்மம் என்ன...............? 

5) பால்தாக்கரே உயிருடன் இருக்கும் வரை அஜ்மல் கசாப் உண்மையை வெளியில் சொல்ல மாட்டான், பால்தாக்கரே மரணத்திற்கு பிறகு உண்மையை உளறிவிடுவானோ என்ற அச்சத்தின் காரணமாக அதிரடியாக தூக்கிலிட்டதன் மர்மம் என்ன...........? 

6) அந்த தாக்குதலின் போது முக்கிய அதிகாரியும், காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை வெளிக்காட்டியவருமான மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே அவர்களை கொலை செய்துள்ளார்கள், அப்படிப்பட்ட உயரிய, நேர்மையான அதிகாரியை கொலை செய்தும் அது சம்பந்தமாக எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என்றால்..... 

அந்த அதிகாரி மும்பைக்கு தேவையில்லை.... அவரை விட்டு வைத்தால் நம்முடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடுவார் என்ற நெருக்கடியின் காரணமாக ஒருவரை கொன்றால் கொலை, பலரை கொள்ளும் போது சேர்த்து ஹேமந்த் கர்கறேவை கொலை செய்தால் அந்த ஆவணங்களை இலகுவாக மூடிவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படியில் திட்டமிட்டு நடத்திய மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரபல தாதா யார்.........?

7) ஹேமந்த் கர்கரே மரணித்து சில மாதங்கள் கழித்து அவரது மனைவிக்கு நரேந்திர மோடி அன்பளிப்பு தொகையாக 2 கோடி ருபாய் கொடுக்கும் போது அதை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன..........?

8) ஹேமந்த் கர்கரே அவர்கள் மரணிப்பதற்கும் ஒரு வாரத்திற்கும் பிறகு இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம் எனும் தலைப்பில் இந்துத்துவ காவி பயங்கரவாதிகளின் உண்மைகளை முக்கிய புள்ளிகளை வைத்து புத்தகம் வெளியிட முடிவு செய்து வைத்திருந்தார்,

அந்த புத்தகம் வெளியிடக்கூடாது அவ்வாறு புத்தகத்தை வெளியிட்டால் யாருக்கு ஆபத்து உள்ளதோ அவர்கள் தான் ஹேமந்த் கர்கரேயை திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்கள், மேலும் அனைத்து உண்மைகளும் ஹேமந்த் கர்கரே அவர்களின் மனைவிக்கு தெரிந்திருப்பதால் நரேந்திர மோடி கொடுத்த 2 கோடி ரூபாயையும் முகத்திற்கு நேராகவே வாங்க மறுத்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக