Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 நவம்பர், 2012

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் முஸ்லிம் திருமணம் தடுத்து நிறுத்தம் உடனடியாக களத்தில் இறங்கிய SDPI மற்றும் த.மு.மு.க


பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் முஸ்லிம் திருமணம் தடுத்து நிறுத்தம் உடனடியாக களத்தில் இறங்கிய SDPI மற்றும் த.மு.மு.க

விஸ்வக்குடி சேர்ந்த மணமகனுக்கும் குரும்பலூரை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் பேசி வருகின்ற 17.11.2012 சனிக்கிழமை இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.

அதற்கு முன்பாகவே வியாழக்கிழமை அன்று அரசு அதிகாரிகள் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை திருச்சி காப்பகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.


இதை அறிந்த SDPI மற்றும் த.மு.மு.க நிர்வாகிகள் அன்று மாலை 5:30 மணிக்கு உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். SDPI மற்றும் த.மு.மு.க தொண்டர்களும் பெருமளவில் குவிந்து விட்டனர்.

இறுதியாக கலெக்டர் குழந்தைகள் திருமணத்தை தடுத்து நிறுத்த சட்டம் உள்ளதால் அதை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

இதனால் SDPI மற்றும் த.மு.மு.க மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மீண்டும் ஒன்று கூடி மக்கள் திரள் போராட்டம்,சட்ட ரீதியான போராட்டம் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக