பழைய திருடி கதவ திறடி....
நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரத்தின் நிலைமை ஆரம்ப காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்மவர்கள் இதை பார்த்தல் ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே தெரிவிக்க கூடும். ஆனால் அந்த நிலைமையோடு வாழ்ந்தால்தான் அதன் நிலைமை தெரியவரும். காரணம் முழுமையாக தொழில் செய்யமுடியாத நிலை, இரவு குழந்தைகளுக்கு தூக்கமின்மை, குழந்தைகளின் கல்வி போன்றவைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த இரண்டு நாட்களின் நிலைமையின் காரணமாக இன்று நமதூரில் மேற்கு ஆத்துகொல்லை உட்பட ஒருசில தெருக்களில் குடி தண்ணீர் கூட வரவில்லை. சுமார் 14 மணிநேரம் அறிவிக்க படாத மின்வெட்டு அமுல் படுத்துவதாக தெரிகிறது. இதனால் நமது செய்திகளும் சரியான நேரத்தில் வெளிவர மின்சாரமும் ஒரு தடங்கலாக உள்ளது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக நமதூரில் மின்சாரம் தடைபடும் நேரம்:
- காலை 6 மணிமுதல் 9 மணிவரை மின்சாரம் தடை
- காலை 12 மணிமுதல் 7 மணிவரை மின்சாரம் தடை
- காலை 8 மணிமுதல் 10 மணிவரை மின்சாரம் தடை
- காலை 11 மணிமுதல் 12 மணிவரை மின்சாரம் தடை
- காலை 1 மணிமுதல் 2 மணிவரை மின்சாரம் தடை
- காலை 3 மணிமுதல் 4 மணிவரை மின்சாரம் தடை.
என்ன சொல்லி என்ன நடக்க போகுது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பது போல அதிகாரவர்கதில் உள்ளவர்கள் கவனம் செலுத்தாத பொழுது பொதுமக்கள்லாகிய நாம் அநியாயத்தை தட்டி கேட்காமாமல் இருந்தால் இந்த நிலை நீடிக்கும், என்பது மட்டும் உறுதி.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக