இம்தியாஜ்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தம்பி எப்படி இருக்க..
சுல்தான்: வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்! அல்லாஹ்வின் உதவியுடன் நல்லா
இருக்கேன் அண்ணேன்!
இம்தியாஜ்: துபாயிலிருந்து எப்ப வந்த தம்பி!
சுல்தான்: வந்து இரண்டு நாள் ஆகுது அண்ணேன்.
இம்தியாஜ்: தூபாயெல்லாம் எப்படி இருக்கு தம்பி...
சுல்தான்: தூபாயெல்லாம் நல்லா தான் இருக்கு,வழக்கம் போல நாம
உழைச்சிகொண்டேதான் இருக்க வேண்டியதுதான்...
இம்தியாஜ்: என்ன அப்படி சொல்லிட்ட தம்பி.உங்க மகன்தான் படிப்ப முடிச்சுட்டானே
அப்புறம் என்ன விசா எடுக்க வேண்டியதுதானே..
சுல்தான்: அவன் என்ன அண்ணேன். ஏதோ கோர்ச் முடிக்கனும் என்று சொல்றான்,பணம் தான் ஓவரா
செலவாகுது.
இம்தியாஜ்: பாஸ்போர்ட் எடுத்துட்டானா,இல்லை இனி மேல்தானா..
சுல்தான்: அது ஏங்க கேக்குறிங்கஅண்ணேன,பாஸ்போர்ட் எடுக்க அப்ளை பண்ணினா!ரேசன் கார்டு,காலேஜ் சான்று,TC எல்லாம் எடுத்து
கொடுத்தான்.
இம்தியாஜ்: ஆமா தம்பி,இதெல்லாம் கேட்பாங்க தம்பி...
சுல்தான்: இதெல்லாம் ஈசியா பண்ணி கொடுத்துட்டான்.ஆனா இந்த தெரு பெயரை நினைச்சா
ரொம்ப மணவருத்தமாக இருக்கு.
இம்தியாஜ்: என்ன சொல்ற தம்பி..
சுல்தான்: இல்ல அண்ண 3வருடத்துக்கு முன்னே காலேஜ் அப்ல பண்ணின அப்ப உசேன் ரலி
தெரு என்று காலேஜ்ல கொடுத்தான்.ரேசன் கார்டுலையும் அதான் இருக்குது.ஆனா இப்ப ரேசன்
கார்டுல மேற்கு தெற்கு தெரு என்று இருக்குன்னா..
இம்தியாஜ்: ஆமா தம்பி என்னுடைய முகவரியும் மாறியுள்ளது தம்பி.இதை பற்றி
யாருகிட்ட சொல்லுறது என்று தெரியலே..
சுல்தான்: எங்க குடும்பத்துல உள்ள பாஸ்போர்ட் முகவரியை பார்த்தா,என் மனைவிற்கு உசேன் ரலி
தெரு என்று இருக்கு,எனக்கு குளத்து மேட்டு தெரு என்று இருக்கு,ஆனா இப்ப என் மவனுக்கு தெற்கு
தெரு என்று இருக்கு.இதில் எது உண்மை என்று போலிஸ் என்குயரி ஏதாவது வந்தா என்ன
சொல்லுறது தெரியல அண்ணே!
இம்தியாஜ்: ஆமா எனக்கும் பயமாக தான் இருக்கு.நாம தூபாயில கஷ்ட பட்டு
உழைக்குறோம்.நமக்கு நிலையான முகவரி இல்லை என்று வருத்தமாக இருக்கு தம்பி.
சுல்தான்: நாமாவது பரவாயில்லை நம்ம காலத்தை ஓட்டிவிட்டோம்.ஆனா நம்ம சந்திகளை
நினைத்தால் தான் கேள்வி குறியாவே இருக்குதுன.
இம்தியாஜ்: ஆமா தம்பி,நாம நம்பவீட்டு பெயரை ஒரு டஜன் கணக்கில் பதிவு செய்தோமே
தவிர,நம்ம
சரியான முகவரியை கொடுக்க தவரிட்டோம் தம்பி.
சுல்தான்: ஆமா அண்ணே!இது ஒரு பக்கம் இருக்க ஜமாலியா நகரிலியாவது சரியான தெரு
பெயரை அறிவிப்பார்களா அண்னே..
இம்தியாஜ்: இதையெல்லாம் சரி செய்ய வேண்டியது பேரூராட்சி தலைவரும்,மஹல்லா நிர்வாகிகளும்
தான்.இனி வரும் காலங்களில் சரியான முகவரியை பதிவு செய்வார்களா?
சுல்தான்: எங்க அண்னே!எந்த ஒரு சிந்தனை இல்லாமல் இருக்காங்க.இவங்க எங்க மாத்த
பேறாங்க.
இம்தியாஜ்: நிச்சயமாக மாத்துவாங்க தம்பி பொறுத்து இருந்து பார்ப்போம்.
சுல்தான்: இல்ல இவர்கள் இப்படியே போனார்கள் என்றால் ஊர் பெயரையே மரந்து விட
வேண்டியது தான்.
சரியாக சொன்னீர் என்னுடைய தெரு பேருகுடத்தான் மாறிருக்கு
பதிலளிநீக்கு