Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 12 நவம்பர், 2012

கார்ப்பரேட்டுகள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்துவிடும் – ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அருந்ததி ராய் பேச்சு!


ஷார்ஜா:இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றாலும், ஆளுவது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாகும். ஆகையால் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்துவிடும் என்று பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பவிலியனில் ‘மீட் தி ப்ரஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அருந்ததி ராய்.

அப்பொழுது அவர் கூறியது: “இந்தியாவில் உப்பு முதல் விமானம் வரை தயாரிக்கும் ஏகபோக உரிமை சில நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடுச் செய்வதை கட்டுப்படுத்துவது அவசியமாகும். அமெரிக்காவில் கூட இதற்கு அனுமதியில்லை. 19க்கும் மேற்பட்ட காட்சி-ஒலி-அச்சு ஊடகங்களை கூட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் கட்டுப்படுத்துகின்றன. மக்கள் எந்த செய்தியை அறியவேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்கின்றார்கள்.
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற சூழலும், கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கிய நபர் மாநிலத்தை ஆளும் அபாயகரமான ஜனநாயகம் தான் இந்தியாவில் உள்ளது.
கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த கட்சிக்கும் விருப்பம் இல்லை.இந்தியாவின் முழு ராணுவத்தையும் அனுப்பினாலும் கஷ்மீர் பிரச்சனை தீராது. இதர படையினரை நக்ஸல் வேட்டை என்ற பெயரில் காட்டுக்கு அனுப்பினாலும் பழங்குடியினரின் பிரச்சனைகள் தீராது.
40 சதவீத மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் ஒரு நாட்டை எவ்வாறு சூப்பர் பவர் என்று அழைக்கமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் மீது விலைவாசி உயர்வு உள்ளிட்ட போர்ப் பிரகடனம் செய்கிறது அரசு. இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் அணுசக்தி நிலையங்களை நிறுவ அரசு முயலுகிறது. அன்றாடம் உருவாகும் கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பு இல்லாத தேசத்தில் அணுசக்தி கழிவுகளை என்னச் செய்யப் போகின்றார்கள்? என்பதுக் குறித்து சிந்திக்கவேண்டும்.
அமெரிக்காவின் இணக்கமான சேவகராக அதீத விருப்பம் காண்பிக்கும் பிரதமரைக் கொண்ட தேசத்தில் இதைவிட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. உங்களின் எந்த கழிவையும் இங்கே கொண்டு வந்து கொட்டுங்கள் என்று இந்தியாவின் வாசல்களை மன்மோகன்சிங் அமெரிக்காவிற்காக திறந்து வைத்துள்ளார்.
திரைப்படத்திற்கு திரைக் கதைகளை எழுதியிருக்கிறேன். திரைப்படமாக்க கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையில் ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற நூலை எழுதினேன். ஆகையால் தான் அதனை திரைப்படமாக எடுக்க அனுமதிக்கவில்லை. காட்சிகளை மனதில் கண்டு திரைப்படம் போல வாசிக்கும் வகையில் அந்த நூல் அமைந்துள்ளது. ஒரு வேளை எனது மரணத்திற்கு பிறகு யாரேனும் அதனை திரைப்படமாக எடுப்பார்கள்.” இவ்வாறு அருந்ததி ராய் கூறினார்.
ஷார்ஜாவின் பல்வேறு பள்ளிக்கூட மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அருந்ததி ராய் கலந்துகொண்டார்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக