Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 16 நவம்பர், 2012

நமதூரில் கிழக்கிலுமா?

நமதூரில் கிழக்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் ஆரம்பம்...
நமதூரில் இதற்க்கு முன் கிழக்கில் இருர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் சில மாதங்களுக்கு முன் மேற்கில் இடம்பெயர்ந்தது. கிழக்கில் தான் அதிகம் ஆதரவு தந்த மக்கள், மேற்கு வராமல் இருக்கும் காரணத்தினாலோ என்னவோ கிழக்கிலும் ஒரு மார்க்ஸை இன்று முதல் ஆரம்பம் செய்கிறார்கள். இதனால் நாளை முதல் ஜும்மா தொழுகையும் நடை பெறஉள்ளது.
ஜும்மா என்பது மற்ற தொளுகைபோல்  அல்ல என்பது நாம் சொல்லி இவர்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை! காரணம் ஜும்மா
என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து நடத்துவதே சிறப்பு. தற்போது இவர்கள் மேற்கு பாதி கிழக்கு பாதி என்று பிரித்து தங்களை தாங்களே பிரித்து கொள்வது மட்டும் இல்லாமல் மற்ற இடங்களுக்கு செல்லும் மக்களையும் பிரித்து கொண்டுவருவது ஏன் என்றே பலருக்கு புரியாமலே உள்ளது.
இதில் நாம் கேற்கும் கேள்வி என்னவென்றால் உங்களுக்கும் தாருஸ்ஸலாம் உள்ளவர்களுக்கும் ஏதாவது கொள்கையில் பிரிவு உள்ளதா? கருத்து வேறுபாடு ஒருபக்கம்,!  கொள்கையில் வேறுபாடு உள்ளதா?  சிறிய வேறுபாடு இருந்தால் அவர்களுக்கு எதிராக ஆங்காங்கே தொழுகை நடத்துவீர்களா? அப்படியென்றால் பெருநாள் தொழுகை இரண்டாக நடத்துவீர்களா? உங்கள் மர்கசில் தொழ இடமில்லை என்றால் சரி! அப்படி இல்லாமல் ஊருக்கு மூன்று நான்கு என்று ஜும்மாவை அதிகரித்து சென்றால் அது சரியல்ல? பிரிவை உண்டுபண்ணி ஜும்மவையே  இரண்டாக பிரித்த நீங்கள் மேற்கு மற்றும் கிழக்கு ஜமாத்தை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை?  கல்யாண வீடு என்றால் அதில் நீங்கள்தான் மாப்பிளை என்றால், மைய்யத்து வீடு என்றால் அதிலும் நீங்கள் தான் மைய்யத்து என்றால் எப்படி? தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுமக்களே இதற்க்கு நீங்கள் ஆதரவு செலுத்தாதீர்கள்! எவ்வளவு தூரம் இருந்தாலும் ஒரே ஜும்மாவையே  வலியுருத்துங்கள் இதுதான் நீங்கள் உங்கள் ஜமாத்திற்கு செயும் கடமை.
நமது நிருபர்.

1 கருத்து:

  1. பிஸ்மில்லாஹ் .......
    அஸ்ஸலாமு அழைக்கும்
    மக்களுக்கு இதை எடுத்து சொல்லுக
    சகோ:
    651. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

    902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

    2891. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    2989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

    இவை அனைத்து புஹாரியில் உள்ளவை.

    மக்களை நன்மைன் பக்கம் வரவையுங்கள் .........

    பதிலளிநீக்கு