Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஹெலிஹாப்டர் பைலோரி என்கிற ஆபத்தான பாக்டிரியா!


ஹெலிஹாப்டர்  பைலோரி என்கிற H.Pylori பலநூறு ஆண்டுகளாக மருந்து கண்டு பிடிக்கப்படாமல் குறிப்பாக இந்த நோய் எதனால் வருகிறது  என்று தெரிந்து கொள்ள முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.
இந்த ஹெச். பைலோரி நல்ல பாக்டரியா வகையை சேர்ந்தது. இது நமது உடலில் தேவையில்லாத வாய்வுகளை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கும். மற்றபடி இதனால் வேறு எந்த தீங்கும் இல்லை. ஆனால் இந்த தேவையில்லாத வாய்வுக்கள்தான் நமது உடலில் பல்வேறு நோய்களை கொண்டு வருகிறது.

இந்த கொடிய வகை நோயை கண்டுபிடித்து அந்த பாக்டிரியாவுக்கு வடிவம் கொடுத்தவர்கள் ஆஸ்த்ரேலியாவை சேர்ந்த டாக்டர் பேரிமார்சல், ராபின்வாரன் ஆகும். இந்த ஹெச். பைலோரி பாக்டிரியாவிற்கு ஹெலிஹாப்டர்  போன்ற இறக்கைகள் இருப்பதால் இதற்க்கு இந்த பெயர் வந்தது.   இந்த நோயை கண்டுபிடித்ததற்காக இந்த மருத்துவர்களுக்கு  2005 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த பாக்டிரியா குடலில் அமிலத்தன்மையை உருவாக்கி வாய்வை உண்டாக்குகிறது. இதனால் நமக்கு அல்சர் போன்ற வியாதிகள் வருகிறது.  இந்த கிருமிகள் நமது குடலின் உட்புற தோல்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.இந்த கிருமியை அழிக்க இதற்க்கு முன்னாள் மருந்து கண்டு பிடிக்கப்படாததால் மருத்துவர்கள் இதற்க்கு அல்சர் மற்றும் வாய்வுக்கு உண்டான மருந்துக்களை கொடுப்பார்கள். அதை சாப்பிட்டதும் மருந்தின் வீரியம் குறையும் வரை இந்த பாக்டிரியாக்கள் அமைதி காக்கும். மருந்தின் வீரியம் குறைந்ததும் மீண்டும் தன் வேலையை காட்ட தொடங்கும். 

இந்த பாக்டிரியா உண்டாகும் நோய்கள்: அல்சர், வாய்வு, மூட்டு வலி, உடல் சோர்வு, உடலின் பல்வேறு பகுதிகளில் வாய்வு பிடிப்பு, பசியின்மை, கொஞ்சம் சாப்ப்ட்டாலும் வயிறு உப்பி கொள்தல்அடிக்கடி மலத்துவாரம் வழியாக கெட்ட வாய்வு வெளியேறுதல், உடலின் அனைத்து மூட்டுகளிலும் வலி ஏற்ப்படுத்துவது, சாப்பாடு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்ருக்கு மேல் நெஞ்சி பகுதிகளில் கேஸ் அடைத்து கொண்டு அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்ற நோய்களை உண்டாக்கும்.

இந்த நோயை தடுக்கும் வழிமுறைகள்:இந்த ஹெச். பைலோரி நோயை தடுக்க முதலில் சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும். பாத்திரங்களை சரியாக கழுவாமல் சாப்பிடுவது, உணவை சாப்பிட்டு விட்டு மீதம் வைத்து திரும்ப சாப்பிடுவது, கெட்டு போன, மக்கிப்போன, நாள்பட்ட உணவுகளை சாப்பிடுவது, குறிப்பாக சுகாதாரம் இல்லாத ஹோட்டல்களில் சாப்பிடுவது, திறந்து வைக்கப்பட்ட உணவுகளை வாங்கி திண்பது போன்றவற்றால் இது உண்டாகிறது. 

இந்த நோயை பற்றிய அறியாமை: இந்த நோயை பற்றி கிராம புறங்களில் உள்ள நிறைய மருத்துவர்களுக்கு தெரியாது. அதனால்  பெரும்பான்மையான மருத்துவர்கள் அல்சர் மற்றும் வாய்வுக்கு உள்ள மருந்துக்களையே கொடுப்பார்கள். மேலே கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே H.Pylori இருக்கிறத்தா என்று பரிசோதனை செய்து பாருங்கள். இந்த நோய்யினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆசியா கண்டத்தை சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக  இந்தியர்கள் என்று சொல்லலாம். 

இந்த நோயிக்கு உண்டான மருந்து:இதை சாதாரண நோய் என்று அலட்சியமாக இருந்து விட வேண்டாம். இந்த நோய் கிருமிகளை முற்றிலுமாக  அழிக்க 14 நாட்கள் 3 வேளை தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும். ஒருநாள் கூட விட்டு விடாமல் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த கிருமிகள் முற்றிலும் அழிந்து போகும். மேற்கூறிய அறிகுறிகள் இருப்பவர்கள் நீங்களாகவே மருத்துவர்களிடம் ஹெச்.பைலோரி பற்றி நினைவுபடுத்துங்கள். அல்லது நீங்களாகவே லேப்களில் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்.  பின்னர் மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ளுங்கள்.

-அமெரிக்காவில் இருந்து ஷேக் அப்துல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக