Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 7 நவம்பர், 2012

முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம் : "சென்னை" முதல் "டெல்லி" வரை ஒலிக்கும் குரல்கள்

குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூககத்துக்கு நீதி கேட்டு, சென்னையிலும் மதுரையிலும் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" மாநாடுகளை நடத்திய அதேவேளையில், நேற்று டெல்லியில் "POLITICS OF TERROR : TARGETING MUSLIM YOUTH" என்ற தலைப்பில் கன்வென்ஷன் நடத்தப்பட்டது.
சென்னையில் "பாப்புலர் ஃப்ரண்ட்" நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில் பங்கேற்று திருமாவளவன் எம்.பி., மற்றும் பல தலைவர்களும், முஸ்லிம்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தை கண்டித்தனர்.
அதேபோல,  டெல்லியில் "PEOPLE CAMPAIGN AGANST POLITICS OF TERROR" (PCPT) அமைப்பின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர், முஹம்மத் அதீப் தலைமையில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில், லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் என, பல தலைவர்களும், முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் நிகழ்த்தப்படும் அநியாயங்களை - அரச பயங்கரவாதங்களை தோலுரித்துக்காட்டினர்.
லாலு பிரசாத் யாதவ் பேசும்போது:
முஸ்லிமாக பிறப்பது தவறா? முஸ்லிமாக வாழ்வது பாவகாரியமா? ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? முஸ்லிம் இளைஞர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால் கேட்க நாதியில்லை என நினைக்கிறார்களா? என அடுக்கடுக்கான  கேள்விக்கணைகளை தொடுத்த லாலு, முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் எவராலும் ஆட்சிக்கு வரமுடியாது என்றார்.
மேலும், முஸ்லிம்களின் நலன் சார்ந்த எத்தகைய போராட்டத்துக்கும் தனது ஆதரவு உண்டு என்றார்.
ராம்விலாஸ் பாஸ்வான்:
"சிமி" அமைப்பின் மீது தடை விதிக்கும்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புக்கள் மீது கருணைப்பார்வை செலுத்துவது ஏன்? எனக்கேள்வி எழுப்பினார்.
மேலும், சர்வதேச அளவில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சூழ்ச்சி நடப்பதாக சொன்ன அவர், இந்தியாவை பொறுத்தவரை, மத சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்த பிரச்சாரத்தை எதிர்க்கவேண்டும் என்றார்.
பிரகாஷ் காரத்:
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என சொல்லிக்கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து கைது செய்வது "பாரபட்சமான செயல்" என போலீஸ் மீது குற்றம் சாட்டிய காரத் "UNLAWFUL ACTIVITIES PREVENTION ACT" (UAPA) சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக கூறினார்.
 (1983 முதல் இன்றுவரை "UAPA" சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் 18,686.  அதில் முஸ்லிம்கள் மட்டும் 15,225)
நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப்:
ஒரு தேசத்தில் ஆண்டுக்கணக்கில் நீதிமன்றங்கள் நியாயமான தீர்ப்புக்கள் வழங்காமலும், காவல்துறை செய்யும் அநியாயங்களை கண்டுக்கொள்ளாமல், அரசுகள், குருடாகவும் -செவிடாகவும் செயல்பட்டால், அந்த நாட்டின் இறுதி முடிவு எங்கே போய் முடியும்?
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு யார் நீதி வழங்குவது? எனக்கேட்ட அவர், நாட்டிலுள்ள நியாயவான்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
ஏ.பி.பரதன்:
அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் எளிதானதல்ல, சிறைபட்டுள்ள அப்பாவிகளின் விடுதலைக்காக சி.பி.ஐ. கட்சி, தனது "வழக்கறிஞர் பிரிவு" மூலம் சட்ட ரீதியான உதவி செய்யும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர்:
குற்றவாளிகளை தண்டிப்பதில் தவறில்லை; ஆனால் அப்பாவிகளை சிறையிலடைப்பதை ஏற்க முடியாது எனக்கூறிய அவர், முஸ்லிம்கள் குறிவைக்கப்படுது தொடர்பாக, உள்துறை அமைச்சரை விரைவில் சந்தித்து பேசவிருப்பதாக சொன்னார்.
இந்த தேசம் "காந்திய வழியில் செல்வதாக இருந்தால் அரசியல் சாசன சட்டத்தை மதித்து அனைத்து குடிமக்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்"
நீதி வழங்க முடியாதவர்களுக்கு, ஆட்சிக்கட்டிலில் அமரும் தார்மீக உரிமை இல்லை என்றார்,அவர்.
சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ்:
போலீஸ் துறையை சீரமைக்க வேண்டும், அப்பாவிகளை வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.
மேலும், இந்திய தேசத்தில் ஒரு சமுதாயம் குறிவைத்து தாக்கப்படுவது "தேசிய அவமானம்" என்றார்.
கூட்டத்தில் நீதியரசர், ஏ.எம்.அஹ்மதி, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா  உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர்.
 நன்றி  : மறுப்பு செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக