Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 16 நவம்பர், 2012

பெரம்பலூரில் இருந்து சென்னை வரை சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க துப்பாக்கி குழு ஒப்புதல் (வீடியோ இணைப்பு)..


 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.
நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.
முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக