Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 29 நவம்பர், 2012

நமதூர் கடைவீதியில் காவி உடை.

நமதூர் கடைவீதியில் காவி உடை.


கடந்த வாரமாக நமதூரில் காவி உடைகள் அணிந்து  5 நபர் நாடிபார்க்கிறோம் என்ற பெயரில் கடைவீதியில் உலாவி வருகின்றனர். இதைபற்றி நமது நிருபர்கள் கவனமாக இவர்களை பற்றி கடைவீதியில் விசாரித்து பார்த்ததில் மருந்து தருகிறோம் என்று கூறுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

இன்று வரை அவர்கள் சாலையில் தான் சுற்றி திறிகிறார்கள். ஊரின் தெருபக்கம் அவர்கள் போகவில்லை! நமது நிருபர்களும் இவர்களைபற்றி நமதூர் இளைஞர்களிடம் கண்கானிப்பு செய்யுமாறு அறிவுருத்தி வருகின்றனர். தெருபக்கம் இவர்கள் சென்றால் தடுக்குமாறும் உரிய முறையில்
ஜமாத்துக்கு தெரியபடுத்துமாறும் ஆலோசனை கூறிவருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊரில் உள்ள நமது நிருபர்கள் அவசர ஆலோசனைகள் செய்தனர். இதில் ஊரின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளும் எடுக்கப் பட்டது.

ஊரில் உள்ள இளைஞர்களிடமும் மக்களிடமும் இது போன்ற விசயங்களில் விழிப்புணர்வோடு இருக்க அறிவுருத்துவது.
நாங்களும் சமுதாயத்திற்காக உழைக்கிறோம் என்ற பெயரி்ல் இருக்கும் இயக்கங்களிடம் இது போன்ற விசயங்களை முன் வைப்பது.
இவைகளை பற்றி நாளைய ஜூம்மாவில் பொது அறிவிப்பு செய்யுமாறு அனைத்து ஜமாத்தார்களுக்கும் நமது இணையதளத்தின் மூலம் கேட்டு கொள்கிறோம்.

இந்த செய்தியை படிக்கும் தாங்கள் உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் எடுத்து சொல்லுங்கள். 

குறிப்பாக வெளிநாட்டில் உள்ள நமதூர் வாசிகளுக்கு கனிவான வேண்டுகோள். இது போன்ற அன்னியர்களிடமிருந்து உங்கள் இரத்த சொந்தங்களிடம் அறிவுருத்துமாறு நமது இணையதளத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம். 
நமதுநிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக