புதுடெல்லி:இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி என்ற பெயரில் நர்ஸாக வேலைப்பார்க்கும் 32 வயதான ஹஸீனா பேகம் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார்.
”அண்மையில் நான் வேலைப்பார்த்த மருத்துவமனையில் வேலைத்தேடி சில பெண்கள் வந்தனர். ஆனால், ஒரு முஸ்லிம் பெண்ணையும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகிகள் என்னிடம் கூறினர். அதே வேளையில் நான் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்தால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்” என்ற அஞ்சுகிறார் ஹஸீனா பேகம்.
கீழ் மட்ட வேலைகளைபார்க்கும் முஸ்லிம் பெண்கள் தாம் தங்களது பெயரை இந்து பெயராக மாற்றுகின்றனர். இத்தகைய துறைகளில் பணியாளர்களின் அடையாள அட்டை கோரப்படாதது இவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. வேலைக்காக முஸ்லிம்களை ஹிந்துக்களாக மாற்றும் (ஹிந்து பெயர்களை சூட்டும்) ஏராளமான ரிக்ரூட் மெண்ட் ஏஜன்சிகள் கொல்கத்தாவில் இயங்குவதாக ஹவுஸ்மெய்ட் ஏஜன்சியை நடத்தி வரும் பரீன் கோஷ் கூறுகிறார்.
இந்திய வேலை வாய்ப்புத்துறையில் நிலவும் அபாயகரமான சமூக பாரபட்சம்தான் பரீன் கோஷின் வார்த்தைகள் மூலம் நிரூபணமாவதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இயலவில்லை என்பது வேலைவாய்ப்புத்துறையில் நிலவும் சமூக பாரட்சம் நிரூபிப்பதாக சிறுபான்மை உரிமை ஆர்வலரான ஆயிஷா பர்வேஷ் கூறுகிறார். அமைப்பு சாரா தொழில் துறைகளில் மட்டுமல்ல, அரசுத்துறைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாக ஆயிஷா கூறுகிறார். முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக இந்துக்கள் கருதுவதாக மேகாலாயாவில் நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஃபிலாஸஃபி பேராசிரியரான பிரசஞ்சித் பிஸ்வாஸ் கூறுகிறார்.
சமூக-பொருளாதார – கல்வித் துறைகளில் முஸ்லிம்கள் தலித்துகளை விட மோசமான நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக