கல்வி விஷயத்தில் "மார்க்க கல்வி" என்றும் "உலக கல்வி" என்றும் பிரித்துப்பார்ப்பது, முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார், ஜஸ்டிஸ் எம்.ஏ.எஸ்.சித்தீகி.
தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள்
குறித்து 156 இடங்களில் சொல்லப்பட்டுள்ள "திருக்குரானில்" வாழ்வியல் சட்ட திட்டங்களையும் - நெறிமுறைகளையும் 756 இடங்களில் இறைவன் குறிப்பிட்டுள்ளதாக சொன்ன அவர், "பெண் கல்வி" குறித்தும் விரிவாக பேசினார்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து, நேற்று டெல்லியில் நடந்த "முஸ்லிம் கல்வி குறித்த தேசிய கருத்தரங்கத்தில்" பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
வடக்கிழக்கு மற்றும் வடமாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் சமூக மக்கள் வாழ்ந்து வந்தபோதிலும், அவர்களின் பின்தங்கிய நிலைக்கு "கல்லாமை" தான் முக்கிய காரணம், என்று பேராசிரியர் அக்தருல் வாஸிஃ, தெரிவித்தார்.
மேகாலயா மாநில விஞ்சானம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர், டாக்டர் மஹ்பூபுல் ஹக் பேசுகையில்,
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அளவுக்கு நிலைமை சென்றதற்கு முக்கிய காரணம் "கல்வி விழிப்புணர்வின்மை" தான் என்று கூறிய அவர், அஸ்ஸாம் மக்களின் கல்விக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில்,டெல்லி மைனாரிட்டி கமிஷன் சேர்மன் சப்தர் அலி, முஷாவரத் கமிட்டியின் அபூபக்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக