Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 29 நவம்பர், 2012

தப்லீக் ஜமாத்தினரை கையில் விலங்கிட்டு -அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்!


ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது.
 இது பற்றிய செய்தியாவது:
இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா"ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது.
ஏன்? என சக பயணிகள் கேட்டபோது, இவர்கள் "பயங்கரவாதிகள்" என தெரிவித்ததுடன், இவர்கள் தங்கள் பைகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும், ஆக்ராவுக்கு அடுத்த ரயில் நிலையமான "மதுரா"வில், வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.

அங்கு தயார் நிலையில் "30 பேர் கொண்ட போலீஸ் படை" காத்திருந்தது.
ரயிலை விட்டு கீழே இறக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தின் 14 நபர்களின் சட்டைகளையும் கழற்றி - அடித்து உதைத்து - கைகளில் விலங்கிட்டு, ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து "ஹத்தன் காவல் நிலையம்" வரை இழுத்து சென்றனர்.
தொழுகை நடத்த அனுமதி கேட்டபோதும் ஆடைகள் கொடுக்கப்படவில்லை.
ஒரு வழியாக திறந்த மேனிகளுடன் "அரைகுறை" ஆடைகளுடன் தொழுது முடித்தனர், தப்லீக் சாத்திகள்.
மேலும், அவர்கள் கையிலெடுத்து சென்றிருந்த "திருக்குர்ஆன்" தாலீம் புத்தகங்கள், தொழுகை சம்பந்தப்பட்ட வழிகாட்டி நூல்கள் உள்ளிட்ட மார்க்க புத்தகங்களை அவமதிக்க கட்டாயயப்படுத்தப்படுத்தனர்.
காவல் நிலையத்தின் தண்ணீர் தொட்டியில் அவர்களின் "தலைகளை அமுக்கி" முக்கி எடுத்து "சித்திரவதை" செய்தனர்.
இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, காவல் நிலையத்தை 400க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.
தவறை உணர்ந்த போலீஸ், அவர்களை விடுதலை செய்தனர்.
என்றாலும், தப்லீக் ஜமாத்தில் ஒருவர் நீங்கலாக 13 நபர்கள் மீதும், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 400 நபர்கள் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடந்த அநியாயங்கள் குறித்தும், இதில் சம்மந்தப்பட்டுள்ள உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா போலீசின் மீதும் புகார் கூறி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு "மில்லி கவுன்சில்" சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 குறிப்பு:
தப்லீக் ஜமாஅத், அது துவக்கப்பட்ட 1920 முதல் இன்று வரை "அரசியல்" மற்றும் உலக விஷயங்களுக்கு அப்பாற்பட்டு, முஸ்லிம்களுக்கு மத்தியில் "ஆன்மீக பிரச்சாரம்" செய்யும் இயக்கம் என்பது, எல்லா அரசுகளுக்கும் நன்றாக தெரியும் நிலையில், இவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், அவமரியாதைகள் கேவலங்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக