Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 15 நவம்பர், 2012

ஆஷுரா நோன்பு...


ஆஷுரா நோன்பு.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை ஆஷுராஎன்றழைப்பார்கள்.
ஆஷுரா நோன்பின் சிறப்பு : நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றிருப்பதைக் கேள்விப்பட்டதும் இது ஏன்?” என வினவினார்கள். அதற்கு யூதர்கள், ”இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான், நபி மூஸா(அலை) மற்றும் அவர்களுடைய தோழர்களையும் எதிரிகளிடமிருந்து விடுவித்து ஃபிர்அவ்னையும்
அவனது ஆதரவாளர்களையும் அல்லாஹ் கடலில் மூழ்கடித்தான். அன்றைய தினம் முன்னோர்களும் நோன்பு நோற்றார்கள். ஆகையால், நாங்களும் நோன்பு நோற்கின்றோம்என்று யூதர்கள் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “மூஸா(அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நாங்களே அதிக உரிமையுள்ளவர்கள்என்று தானும் அந்நாளில் நோன்பு நோற்றதுடன் தன் தோழர்களை நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். நூல்-புகாரி.
இதே செய்தி முஸ்லிம் நூலில், பின் வருமாறு இடம் பெற்றுள்ளது. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதுடன், பிறரையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, இன்றைய தினத்தை யூதர்களும், கிறித்தவர்களும் கண்ணியப் படுத்துகின்றார்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”அப்படியாயின் அடுத்த ஆண்டு, அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்”, என்று கூறினார்கள். இன்னோரு அறிவிப்பின்படி, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு முஹர்ரம் மாதம் வருவதற்கு முன்பாகவே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். நூல்-முஸ்லிம்.
ஆஷுரா நோன்பின் பலனும் நோக்கமும் : ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பது கடந்த வருட பாவங்களை அழித்துவிடும்.  நூல்-முஸ்லிம்.
பத்தாம் நாள் மாத்திரம் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது நபி வழியாகும். தன் நேசர்களான மூஸா(அலை) மற்றும் அவர்களைப் பின்பற்றியோரை காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் அல்லாஹ் மூழ்கடித்தது இந்த முஹர்ரம் பத்தாம் நாளில் தான். அதாவது இந்த பத்தாம் நாள் மாத்திரம் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்கும்படி நபி அவர்கள் உபதேசித்தார்கள்.
இந்நாளிள் நடக்கும் அனாச்சாரங்கள் : முஃமீனாகிய நமக்கு நோன்பைத் தவிர வேறு எந்த விசேஷ வணக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை. ஆனால், மார்க்கத்தில் கூறப்படாத பல புதிய சடங்குகளைச் சிலர் இந்நாளில் உருவாக்கியுள்ளார்கள். அவைகள், ஊருக்கு ஊர், பகுதிக்குப் பகுதி வேறுபடுகின்றன. அவற்றில் சில, ஆஷுரா தினத்திற்கென்று விசேஷ பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதினால் அந்த வருடம் மரணிக்க மாட்டார்கள் என நம்புவது. வசிக்குமிடத்திலும், தொழில் செய்யுமிடத்திலும் சாம்பிராணி புகையிடுவதன் மூலம் பொறாமை, துவேஷம், சூனியம் முதலியவை முறிந்துவிடும் என எண்ணுவது. வழக்கத்திற்கு மாறாக வீட்டில், விசேஷ உணவு (கொலுக்க்கட்டை, மாவு,.…) சமைத்து உண்ணுவதும், புத்தாடை அணிந்தும் ஆடம்பரமாக செலவழித்து மகிழ்வதும். வருடத்திற்குத் தேவையான முக்கியப் பொருட்கள் அனைத்தையும் இந்நாளில் வாங்குவது. விசேஷமான தொழுகையை ஏற்பாடு செய்வது. துக்க நாளாக அனுஷ்டித்து ஆடைகளை கிழித்துக்கொள்வதோடு நில்லாமல், தனது உடலை காயப்படுத்தி இரத்தம் சிந்துவது. மண்ணறைகளையும் மஸ்ஜித்களையும் தரிசிப்பது. இன்னும் பல. இவைகள் யாவும் அனாச்சாரமாகும். வழிகேடாகும். இவற்றில் எதையுமே குர் ஆனிலோ, நபிமொழியிலோ வழிகாட்டப் படவில்லை. அதுபோல, முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் ஹிஜ்ரி ஆண்டின் தொடக்க நாளாக இருப்பதால், அந்நாளை புத்தாண்டு தினமாகக் கொண்டாடுவதாகக் கருதி, ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறுவதும் விருந்தளித்துக் கொள்வதும் நடைமுறையிலிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்து கூறிக்கொள்வது நபிவழியல்ல. இந்த கருத்து தமிழ், ஆங்கில புத்தாண்டுகளுக்கும் பொருந்தும். அனைத்தும் அனாச்சாரமான வழிகேடாகும். இவைகள் யாவும், வேற்றுமதத்தை பின்பற்றும் செயலாகும்.
யார் பிற சமூகக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரேஎன்பது நபிமொழி.  நூல்-அபூதாவூத்.
இன்னும் சிலர், முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன்(ரழி) அவர்கள் ஷஹீத்ஆக்கப்பட்ட கர்பலாநிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாக பஞ்சாஎடுப்பதும் ஆயுதங்களால் தம்மைத் தாமே தாக்கி இரத்தம் சிந்துவதும், “பூக்குழி இறங்குதல்என்ற பெயரில் நெருப்பில் இறங்குவதுமாக பல்வேறு வினோதங்களை செய்கின்றனர். மேலும், ஆஷுரா நோன்பை ஹஸனார்-ஹுஸைனார் நோன்பு என்று பலர் சொல்வதுண்டு. மேலும், இம்மாதத்தின் முதல் பத்து தினங்களில் சிலர் துக்கம் அனுசரிப்பதாகக் கருதி இறைச்சி, மீன், முட்டை ஆகிய புலால் உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். இவைகள் யாவும் ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகளாகும். எனவே, இவற்றை நாம் முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். ஆஷுரா நோன்பிற்கும் ஹுஸன்(ரழி) மரணத்திற்கும் தொடர்பில்லை என்பதை நினைவில் கொள்வோமாக!  அனாச்சாரங்கள் எங்கு தென்படினும், அவற்றிலிருந்து நம்மை காத்திடுவோம். நேர்வழி பெறுவோம்.
அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ்வே போதுமானவன்!
வெளியீடு : தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாலி நகர், லப்பைக்குடிகாடு.
நிர்வாகம் : தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளை. 11/BK498

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக