ஞாயிறு, 30 ஜூன், 2013
சனி, 29 ஜூன், 2013
குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம்
குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம்
மேற்கு காயிதே மில்லத் நகர் (ஆத்து ஓரம் ) பிரச்சனை சம்பந்தமாக இன்று காலை 10:00 மணியளவில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது குறித்து நமதூரில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று காலை தான் மக்களின் பார்வைக்கு தெரிய வந்தது. இதனால் வெகுஜன மக்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தெரிய வில்லை.
மேற்கு காயிதே மில்லத் நகர் (ஆத்து ஓரம் ) பிரச்சனை சம்பந்தமாக இன்று காலை 10:00 மணியளவில் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித வாழ்வு உரிமைகள் கழகம் சார்பில் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது குறித்து நமதூரில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று காலை தான் மக்களின் பார்வைக்கு தெரிய வந்தது. இதனால் வெகுஜன மக்கள் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தெரிய வில்லை.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
வெள்ளி, 28 ஜூன், 2013
நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!
நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!
பழைய புகைப்படம்
இன்று வழக்கம் போல மேற்கு பள்ளியில் ஜிம்மா தொழுகை முடிந்த உடன் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. அது தான் கடந்த சில நாட்களாகவே நமதூரில் உள்ள ஆத்துயோரம் உள்ள பிரச்சனையை பற்றி சுன்னத்து தொழுகை முடிந்த உடன் பேசஉள்ளனர் என்பது தான் அந்த அறிவிப்பு.
வியாழன், 27 ஜூன், 2013
தந்திக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்: தபால் துறை!
ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பதால் மக்கள் இ-போஸ்ட் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் மிகப் பழமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது. தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.
புதன், 26 ஜூன், 2013
ஜூன் - 26' - சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்!
விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும் ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம்.
ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.
திங்கள், 24 ஜூன், 2013
துபாயில் குர்ஆனை விவரிக்கும் பூங்கா விரைவில் திறக்கப்படும்!
துபாய் அரசு தனது நீண்ட நாள் லட்சியமான குர்ஆனின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப்படும்.
வியாழன், 20 ஜூன், 2013
மரணம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் .....
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......
மரணம் எந்த நிமிடம் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம் அதற்கு முன் நாம் நம்முடைய தீனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளவேண்டும் . அல்லாஹ் சொல்வதை படித்து பாருங்கள் " மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்." என்பதை அல்லாஹ் அத்தியாயம் - 103 , ஸூரத்துல் அஸ்ரி (காலம்) சூராவில் சொல்லி தெளிவையும் தருகிறான் - நம்மில் சிந்திப்பவர் உண்டோ ?
ஏராளமான நன்மைகள் அடங்கிய குர்ஆனையும், ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் இன்று நாம் சரியான முறையில் தெரிந்து கொள்ளாததால், கற்றுக் கொள்ளாததால் அல்லது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணரப்படாததால் சரியாக எந்த வழிமுறை உண்மையான நேரான வழிமுறை ? ஷிர்க் எது? ஏகத்துவம் எது? என அறியாமையில் விழி பிதுங்கி கருத்து வேறுபாடுகளோடு தீன் கல்வியை பின்னுக்கு தள்ளி காலத்தை விரயமாக்கி வருகிறோம் என்பதே நிதர்சனமானது . நமது இஸ்லாமிய மார்கத்தின் அடிப்படை விஷயங்களில் நாம் சந்தேகத்துடன் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது சகோதரர்களே !
பராஅத்தும் மத்ஹபுகளும்...
அஸ்ஸலாமு அல்லைக்கும்
பிஸ்மில்லாஹ் ...
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
புதன், 19 ஜூன், 2013
வளர் பிறை - 2
முஸ்தஃபா கொஞ்சம் கொஞ்சமாக குடும்பச் சூழ்நிலையையும், தனது பொறுப்பையும் அந்தச் சிறு வயதிலேயே உணர ஆரம்பித்தான்.
ஹாஜராம்மா வீட்டிலேயே காலையில் இட்லி, மாலையில் பலகாரம் போன்றவை தயார் செய்து கொடுப்பார். முஸ்தஃபா அதை தெருவில் விற்பனை செய்து வருவதும், விடுமுறை நாட்களில் ஊரில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை பார்ப்பவர்களுக்கு உதவியாகவும் சென்று வருவான். இப்படியே 12ம் வகுப்பும் முடிந்தது.
செவ்வாய், 18 ஜூன், 2013
ஞாயிறு, 16 ஜூன், 2013
அபூபக்கரின் அறுதி நிலைப்பாடு!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
சனி, 15 ஜூன், 2013
இஸ்லாமிய திருமணங்களுக்கு பள்ளிவாசல் பதிவை அரசு ஏற்கவேண்டும் உலமா சபை கோரிக்கை!
கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்க தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபையின் மாவட்ட தலைவர் சய்யித் அஹ்மத், செயலாளர் அய்யூப்கான், பொருளாளர் ரசூல்முகைதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ சுரேஷ்குமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தூக்ககோளாறு நோயினால் சாலை விபத்து...
இருபது விழுக்காடு சாலை விபத்துக்கள் தூக்கமின்மையினால் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது.
அமெரிக்கன் தோராசிக் சொசைட்டி, சொந்த வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட தூரம் ஒரேமாதிரியான சாலையில் பயணிக்கும் ஓட்டுனருக்கு நாளடைவில் ஓ.எஸ்.எ எனப்படும் தூக்க குறைபாடு நோய்குறியீடு ஏற்படுவதாகவும் இதனால் ஓட்டுனருக்கு
160 ஆண்டுகால பாரம்பரியமிக்க தந்தி சேவைக்கு சோக முடிவு!
ஒரு காலத்தில் மகிழ்ச்சியான, சோகமான, அவசர செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த 160 ஆண்டுகால பாரம்பரியமிக்க தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் முடிவுச்செய்துள்ளது.
தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த “தந்தி’ (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), “ஸ்மார்ட் ஃபோன்’ என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.
வெள்ளி, 14 ஜூன், 2013
தினசரி நாளிதலில் கால் பதிக்கும் இஸ்லாமிய வரலாறு.....
பாலைவன சிங்கம் உமர் முக்தார்...
இயற்கையில் உமர் முக்தார் ‘மதரஸா‘வில் குர்ஆன் போதிக்கும் ஆசான். ஆனால் யுத்த களத்தில் மிகச்சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்டவர். போர் தந்திரம் மற்றும் தாக்குதலின் மூலம் பல நேரங்களில் இத்தாலிய படையை நிலைகுலைய செய்திருக்கிறார். 20 வருடங்களாக இத்தாலிக்கு எதிராக உமர் முக்தார் மேற்கொண்ட கொரில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய கால அரசியலையும் மையமாகக் கொண்டு நாவல் வடிவில் இப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.
வியாழன், 13 ஜூன், 2013
நமதூரில் கல்வி உதவித் தொகை பெற TNTJ வின் சேவை....
தமிழக அரசு சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்;, புத்தமதத்தினர்) மாணவ, மாணவியர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை அரசு அறிவித்துள்ளது.
1. இதில் மாணவியர்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் மற்றும் ITI, DIPLOMA, DIPLOMA IN NURSING, ITC, NCVT, 12TH VOCATIONAL GROUP, UG, PG, M.PHIL, PH.D, MBBS, BE, ME, B.TECH, ARCHITECTURE, BL மற்றும் ஆசிரியர் பயிற்சி என்று எல்லா துறை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அத்வானிக்கும், மோடிக்கும் என்ன வித்தியாசம்?
பிரதமர் வேட்பாளருக்கான பதவி நரேந்திரமோடிக்கே அளிக்கப்படும் என்பது கடந்த மார்ச் மாதம் நடந்த பா.ஜ.கவின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட உறுதிச்செய்யப்பட்டது. கோவாவில் நேற்று முடிவடைந்த பா.ஜ.கவின் 2 தினங்கள் கொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரச்சாரக்குழுவின் தலைவராக மோடி இருப்பார் என்று அறிவித்ததோடு ஊடகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.
புதன், 12 ஜூன், 2013
குழந்தைகள் பாட்டு!
லெப்பைக்குடிக்காடு குழந்தை பாட்டு! அதுவே நாளைய தலைமுறைக்கு அறிவின் ஊற்று
குழந்தைகளுக்கு பள்ளி திறந்ததை முன்னிட்டு நமது அறிவுக்கு எட்டியவண்ணம் குழந்தைகளுக்காக ஒரு சிறிய பாடல்.
அம்மாவை போல அன்பாய் பழகு.
அத்தாவை போல அறம் செய்து உண்.
தாதா அத்தாவை போல தைரியமாக வாழ்.
தாதி அம்மாவை போல தன்மானத்தோடு இரு
நண்ணி அத்தாவை போல நற்பெயர் எடுத்திடு.
நண்ணி அம்மாவை போல நன்மை செய்திடு.
திங்கள், 10 ஜூன், 2013
வளர் பிறை – 1
வாழ்வில் வரும் கஷ்டங்களிலும் புன்னகைக்க பக்குவப்பட்ட மனிதர் காதர் பாய். அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவள் ஆயிஷா. அடுத்தவன் முஸ்தஃபா. இளையவள் சுமையா. அழகான குடும்பம். குறைந்த வருமானத்திலும் சிறப்பாக குடும்பத்தைக் கொண்டு செல்லும் அறிவான மனைவி ஹாஜரா. அழையா விருந்தாளியாக அடிக்கடி வந்து போகும் கடன் சுமை. இதுதான் அவரது உலகம்.
அவரைப் போலவே அவரின் மனைவி ஹாஜராவும், மூத்த மகள் ஆயிஷாவும் ஏழ்மை வாழ்க்கையைப் பொருந்திக் கொண்டதுதான் அவர்களின் சிறப்பம்சம்.
ஞாயிறு, 9 ஜூன், 2013
துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
பெரம்பலூர் அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மின் நிலையம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பென்னக்கோணம் பகுதியில் புதிய துணை
மின் நிலையம் அமைத்திட வருவாய்த்துறையினர், மின்துறையினர் நடவடிக்கை
எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கழனிவாசல் கிராம மக்கள் 100–க்கும்
மேற்பட்டோர் நேற்று தங்கள் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம்
அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர்
சனி, 8 ஜூன், 2013
புதன், 5 ஜூன், 2013
உழைப்பும் ,பிழைப்பும்.... சிந்தனைக்கு
ஒருவர் ஒரு
காட்டுப்பாதையின் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்பாதையில் ஒரு கழுகு குறுகிப் போய்
பரிதாபமாக உட்கார்ந்து இருந்தது. அம்மனிதர் அந்த கழுகின் நிலையைக் கண்டு மிகவும்
அனுதாபப்பட்டார், பரிதாபப்பட்டார்... இந்த கழுகு எவ்வாறு தன் வாழ்வாதாரத்தை தேடிக்
கொள்ளும் என தனக்குத்தானே எண்ணிக் கொண்டார்.
இவ்வாறு அவர்
நினைத்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கழுகு அதனருகே வந்தது. தன் வாயில் இருந்த
செவ்வாய், 4 ஜூன், 2013
இஸ்லாமிய பெண் உரிமை
நேற்றைய செய்தி: ஜவுளி கடை பொம்மை பார்த்தல் காம சிந்தனை வருகிறது - ஹிந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்
இன்றைய முக நூல் காவிகள் செய்தி: பெண்களை உடலை மறைக்க சொல்லி பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்.என்று ஒரு பதிவு போட்டு தமிழகத்தில் வெளியான 10
ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்று முதல் இடம் பிடித்த ஒரு
திங்கள், 3 ஜூன், 2013
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு
சனி, 1 ஜூன், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)